Levofloxacin 500 mg Tablet Uses in Tamil
நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது மாத்திரை. தினமும் உணவு உண்கின்றமோ இல்லையோ சாப்பிடுவதற்கு ஒரு மாத்திரை சாப்பிட பிறகு ஒரு மாத்திரை என பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மருத்துகளிலே போய் கொண்டிருக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக மருந்து எடுத்து கொள்வதை முடிந்த வரை தடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் எந்தவொரு மருந்தினை உட்கொள்வதற்கு முன் அம்மருத்து எதற்கெல்லாம் பயன்படுகிறது.? இதனை உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா..? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் லெவோஃப்ளோக்சசின் 500 மிகி மாத்திரை உட்கொள்பரவாக இருந்தால் அதனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is Levofloxacin 500 mg Tablet Used For:
லெவோஃப்ளோக்சசின் 500 மிகி மாத்திரை ஆனது காசநோய், நிமோனியா, குரல்வளை அழற்சி, செல்லுலிடிஸ், இரைப்பை அழற்சி, தீவிர அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள், டான்சிலைடிஸ், ஆந்த்ராக்ஸ் மற்றும் பிளேக் போன்ற பாக்டீரிய தொற்றுகளை போக்க பயன்படுத்தபடும் ஒரு ஆன்டிபயாடிக் ஆகும்.
மேலும், இடுப்பெலும்பு, சிறுநீரகம், புராஸ்டேட் மற்றும் தோலின் தொற்றுகளை இந்த ஆன்டிபயாடிக் மருந்து சிகிச்சை அளிக்கிறது.
கைனசெட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன..?
பக்க விளைவுகள்:
ஒரு சிலருக்கு பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே இந்த பக்க விளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- அஜீரணம்
- தூங்குவதில் சிக்கல்
- மூக்கு ஒழுகுதல்
- பசியின்மை
- வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை:
ஒவ்வாமை உள்ளவர்கள் இம்மருந்தினை உட்கொள்ள கூடாது. மேலும், முக்கியமாக மற்ற மருந்துகளுடன் இம்மருந்தை சேர்த்து உட்கொள்ளுதல் கூடாது.
நீங்கள் வேறு ஏதேனும் உடல் பிரச்சனைக்காக மருந்துகளை உட்கொண்டால் இம்மருத்தினை தானாக உட்கொள்ளுதல் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே உட்கொள்ளுதல் வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் இம்மருத்தினை மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மருந்தினை உட்கொள்ளுதல் கூடாது.
moxikind cv 625 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |