Levosalbutamol Syrup Uses in Tamil
மனிதராக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மருந்து, மாத்திரை தான். உடல்நல குறைபாட்டை சரி செய்யும் மருந்து மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தாமாகவே மெடிக்களில் சென்று என்ன செய்கிறோதோ அதை சொல்லி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. அந்த வகையில் நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். இன்றைய பதிவில் Levosalbutamol சிரப் குடிப்பதால் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Levosalbutamol Syrup Uses:
Levosalbutamol சிரப் ஆனது சுவாசிப்பதில் சிரமம், இருமல், மூச்சு திணறல், மார்பு பகுதி இறுக்கம், நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Levosalbutamol Syrup Side Effects:
- தலைவலி
- மயக்கம்
- வாந்தி மற்றும் குமட்டல்
- வயிற்றுவலி
- உடல் சோர்வு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிக்க கூடாது.
Levosalbutamol சிரப்பை குடிக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த சிரப்பை குடிக்கும் போது மயக்கம் வரும் என்பதால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு இதய பிரச்சனை, சர்க்கரை நோய் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, தசை வலி அல்லது தசை பலவீனமாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த சிரப்பை குடிப்பதால் அரிப்பு, வீக்கம், சுவாச பிரச்சனை, ஒவ்வாமை போன்ற பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |