Liv 52 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Liv 52 Tablet Uses in Tamil

இக்காலத்தில் மருந்து என்பது மருந்து என்பது இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. உடலில் என்ன வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் நாம் உடனே அருகிலே உள்ள மருந்தகத்தில் அதற்கான மருந்தினை வாங்கி உட்கொள்வோம். ஆனால் நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்தும் நமக்கு எந்த அளவில் பயன்களையும் பக்க விளைவுகளையும் அளிக்கிறது என்பது பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். எனவே அனைவரும் நாம் உட்கொள்ளும் மருந்தின் பயன்களையும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு மருந்துகளின் பயன்களையும் பக்க விளைவுகளையும் பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இப்பதிவில் liv 52 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பட்டியலிட்டுள்ளோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is Liv 52 Used For:

Liv 52 side effects in tamil

Liv 52 மாத்திரை பின்வரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதனை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

  • மஞ்சள் காமாலை
  • கல்லீரல் பிரச்சினைகள்
  • மலச்சிக்கல்
  • செரிமான கோளாறுகள்
  • அஜீரணம்
  • வயிற்றுக்கோளாறு
  • பசியிழப்பு
  • இருமல்
  • செரிமானம்
  • கல்லீரல் நோய்கள்
  • இரத்த சோகை
  • செரிமானமின்மை
  • சளி
  • கல்லீரலை தீங்கிழைக்கும் கழிவுப்பொருட்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • வைரஸால் ஏற்படும் கல்லீரல் அழற்சியை குறைக்கும்.
  • கல்லீரலில் கொழுப்பு தேங்குவதை தடுக்க உதவுகிறது.
  • செரிமானத்தை மேம்படுத்தி, உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது.
  • மது அருந்துவதால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது.
  • உணவுக்கு பசியை தூண்டி உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மாத்திரை மஞ்சள் காமாலை நோய்க்கு தான் அதிகமாக பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

வழக்கமாக, நாள் ஒன்றுக்கு 2 முறை (காலை, மாலை) உணவுக்குப் பிறகு 1-2 மாத்திரை உட்கொள்ளலாம் (மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப). நீர் அல்லது வெந்நீருடன் உட்கொள்ளலாம். சிறந்த பலன் கிடைக்க சில வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் உட்கொண்டால் வாந்தி, வயிற்றுவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிறுநீரக அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்தவும். குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே வழங்கவும்.

Omnacortil 5 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

பக்க விளைவுகள்:

Liv 52 மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஒரு சிலருக்கு தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இதுபோன்ற பக்கவிளைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

Liv 52 மாத்திரையை நீங்கள் எடுத்து கொள்வதற்கு முன், வேறு ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால் அதனை பற்றி மருத்துவரிடம் கட்டாயமாக கூறுதல் வேண்டும்.

Liv 52 மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்து கொள்ளக்கூடாது. முக்கியமாக நீங்கள் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

Duphalac சிரப் எதற்காக பயன்படுகிறது..? அதன் பக்கவிளைவுகள் என்னென்ன.?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement