Livogen xt மாத்திரை பற்றிய தகவல்கள்..!

Advertisement

Livogen xt Tablet Uses in Tamil

நாம் அனைவருக்குமே அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்கள் தான். இப்பொழுது நமக்கு ஏதாவது உடல்நல குறைபாடு ஏற்படுகிறது என்றால் நமக்கு மிகவும் உதவியாக இருப்பது மருந்துகள் தான். அப்படிப்பட்ட மருந்துகளை பற்றி நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். ஆனால் நாம் அனைவருக்குமே நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றி சரியான புரிதல் இல்லை. அதனால் இன்றைய பதிவில் Livogen xt மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரை பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்

Livogen xt Tablet Uses in Tamil:

Livogen xt Side Effects in Tamil

இந்த Livogen xt மாத்திரையானது பொதுவாக இரத்த சோகை, நாள்பட்ட இரத்த இழப்பு, இரும்புச்சத்து குறைவாக உட்கொள்ளுதல் ஆகியவற்றைக் கண்டறிவதற்கு அல்லது சிகிச்சை செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாத்திரையில் ஃபெரஸ் ஃபுமரேட், ஃபோலிக் அமிலம் ஆகிய உப்புகள் உள்ளன. உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

இதன் விளைவாக, உடலில் போதுமான அளவு இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது, இதனால் உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

கிளிப்பிஸைட் மாத்திரை பற்றிய சில குறிப்புகள்

Livogen xt Tablet Side Effects in Tamil:

இந்த Livogen xt மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • மலச்சிக்கல் 
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • ஒவ்வாமை எதிர்வினைகள்
  • பசியற்ற உணர்வு
  • தூக்கமின்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த Livogen xt மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு hemosiderosis, சிவப்பணுச் சிதைவு ஏற்படுத்தும் இரத்த சோகை அல்லது ஹீமோகுரோமடோடிஸ் போன்றவை இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

இந்த மருந்தினை பயன்படுத்தும் பொழுது மது அருந்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Enalapril Maleate மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement