லோபெராமைட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Loperamide Tablet Uses in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கமும் தான். மேலும் இவற்றால் அதிகரித்துள்ள நோய்களும் தான் காரணம். அப்படி அதிகரித்துள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Loperamide மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்

Loperamide Tablet Uses in Tamil:

Loperamide Tablet Side Effects in Tamil

இந்த Loperamide மாத்திரையானது பொதுவாக வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த மாத்திரையானது இரைப்பை அழற்சி, சிறிய குடல் நோய் மற்றும் குடல் அழற்சி நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

அதேபோல் இந்த மருந்தானது மலத்தில் இரத்தம் வருபவருக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Loperamide Tablet Side Effects in Tamil:

Loperamide மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • வயிற்று வலி
  • தூக்கக் கலக்கம்
  • மலச்சிக்கல்
  • வாந்தி
  • வாய் வறட்சி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

அஸ்தகைன்ட் பி டிராப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Loperamide மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

உங்களுக்கு எய்ட்ஸ் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Pulmoclear மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement