Loratadine Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள்.
எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Loratadine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Dydrogesterone மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க
Loratadine Tablet Uses in Tamil:
இந்த Loratadine மாத்திரையானது பொதுவாக ஒரு ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. அதாவது நமக்கு இப்பொழுது ஒரு ஒவ்வாமை ஏற்படுகின்றது என்றால் அது நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அதாவது கண்கள் நீர்த்துப்போதல், அரிப்பு, தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்றவை ஏற்படும். இவ்வாற்றை குறைப்பதன் மூலம் இந்த மருந்து செயல்படுகிறது. மேலும் இந்த மருந்தானது படைநோய் மற்றும் பிற முக்கிய சரும எதிர்வினைகளை திறம்பட சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Loratadine Tablet Side Effects in Tamil:
Loratadine மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- இருமல்
- அடிவயிற்றுப் பிடிப்புகள்
- வயிற்றில் அழற்சி
- வாந்தி
- சுவாச கோளாறுகள்
- தலைச்சுற்று
- சீரற்ற இதயத் துடிப்பு
- வயிற்றுப்போக்கு
- உலர்ந்த வாய்
- மூட்டு வலி
- தசை வலி
- களைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Levofloxacin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
இந்த Loratadine மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
அதேபோல் 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
எனலாபிரில் 2.5 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |