Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Lorazepam Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை சாப்பிடும் போதுஉடல்நல பிரச்சனை சரியாகிவிட்டால் நல்ல மாத்திரை உடனே சரியாகிவிட்டது என்று கூறுகிறோம். ஆனால் இதனால் பக்க விளைவுகள் இருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளில் உள்ள நன்மை மற்றும் தீமை என இரண்டையுமே அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் அம பதிவில் தினந்தோறும் மாத்திரைகளில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Lorazepam Tablet Uses:

இந்த மாத்திரையானது கவலை மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கபடுகிறது.

Lorazepam Tablet Side Effects:

lorazepam tablet side effects in tamil

  • மயக்கம்
  • தசை பலவீனம்
  • தூக்கம்
  • குழப்பம்
  • மலசிக்கல்
  • தலைசுற்றல்

மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை சாப்பிட்ட பிறகு தலைசுற்றலை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்

மாத்திரை எப்படி வேலை செய்கிறது: 

லோராசெபம் என்பது பென்சோடியாசெபைன். மூளையில் உள்ள நரம்பு செல்களின் அசாதாரண மற்றும் அதிகப்படியான செயல்பாட்டை அடக்கும் ஒரு இரசாயன தூதுவரின் (GABA) செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

மாத்திரை அளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

மேலும் தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும், டீயுடனோ அல்லது காபியிடனோ மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.

Evion lc மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement