Medler Plus Tablet in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் நமது ஆங்கில மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. ஆனால் அவற்றை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிவதில்லை. அதனால் இன்றைய பதிவில் மெட்லர் பிளஸ் என்ற மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துக் கொள்ளபோகின்றோம். பொதுவாக இந்த மாத்திரையை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாத்திரை பற்றிய பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரியாமலேயே பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்=> சைக்ளோபம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Medler Plus Tablet Uses in Tamil:
மெட்லர் பிளஸ் மாத்திரை என்பது ஒரு ஆண்டிஹிஸ்டமைன் ஆகும். இது உடலில் உள்ள ஹிஸ்டமைனின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் செயல்பட தொடங்குகிறது.
இந்த மருந்து பொதுவாக சைனஸ் நெரிசல், மூக்கு ஒழுகுதல், தொண்டை மற்றும் மூக்கு அரிப்பு, கண்களில் நீர், மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை காரணமாக தும்முதல் போன்ற அறிகுறிகளைப் போக்க பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் இந்த மருந்தை ஒரு மாத்திரை, காப்ஸ்யூல் அல்லது திரவ வடிவத்தில் வாய் வழியே உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் உள்ள வரை மட்டுமே இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக இந்த மருந்து உங்களுக்கு பிரச்சனை உள்ள குறுகிய காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த 14 நாட்களுக்குள் சோடியம் ஆக்ஸிபேட், ஃபுராசோலிடோன் அல்லது ஒரு மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் தடுப்பானை எடுத்துக் கொண்டிருந்தால் மெட்லர் பிளஸ் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுவாக உங்களுக்கு சுவாசப் பிரச்சனைகள், கண்ணிறுக்கம், இதய பிரச்சனைகள், கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான தைராய்டு, வயிற்று பிரச்சனைகள் மற்றும் சிறுநீர் கழித்தல் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்தினை பயன்படுத்துங்கள்.
பக்க விளைவுகள்:
தலைச்சுற்றல், குழப்பம், பதட்டம், மலச்சிக்கல், குமட்டல், அமைதியின்மை, மங்கலான பார்வை, உலர்ந்த வாய், ஒருங்கிணைப்பு குறைதல், எரிச்சல், ஆழமற்ற சுவாசம், டின்னிடஸ், நினைவாற்றல் அல்லது கவனக் கோளாறு மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஆகியவை மெட்லர் பிளஸ் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகும்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் படியுங்கள்=> மயோஸ்பாஸ் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |