வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Meftal Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா..?

Updated On: April 17, 2023 7:01 AM
Follow Us:
meftal forte tablet uses in tamil
---Advertisement---
Advertisement

மெஃப்டால் ஃபோர்டே மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Meftal Forte Tablet Uses and Side Effects in Tamil

பொதுவாக நம்முடைய உடலானது எந்த நேரமும் ஆரோக்கியமாக தான் இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்த இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறை முதல் மற்ற அனைத்தினையும் அடிப்படையாக வைத்து பார்க்கும் போது நம்முடைய உடலில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதுமாதிரி நம்முடைய உடலில் இருக்கும் பிரச்சனையினை சரி செய்வதற்கு உடனே மாத்திரையினை வாங்கி உட்கொள்கின்றோம். எப்போதும் நாம் மாத்திரை எடுத்துகொள்ள போகிறோம் என்றால் அது உடனே நம்முடைய பிரச்சனையினை சரி செய்து விடுமா என்று யோசிக்கிறோமே தவிர அதில் உள்ள பக்க விளைவுகள் என்ன என்று யாரும் சிந்திப்பது இல்லை. என்ன தான் மாத்திரைகள் நம்முடைய உடலுக்கு நல்ல தீர்வினை அளித்தாலும் கூட அதில் சில பக்க விளைவுகளும் உள்ளது. அந்த வகையில் இன்று மெஃப்டால் ஃபோர்டே மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Meftal Forte மாத்திரையின் பயன்கள்:

 meftal forte tablet side effects in tamil

மெஃப்டால் ஃபோர்டே மாத்திரையானது நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டு வலி, தலை வலி மற்றும் தசை வலி என போன்ற அனைத்திற்கும் நல்ல தீர்வினை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் காய்ச்சல், பல் வலி மற்றும் நம்முடைய தோலில் ஏற்படும் அழற்சி என மற்ற அனைத்திற்கும் இந்த சிறந்த பலனை அளிக்க உள்ளதாக இருப்பதால் மருத்துவரால் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

Meftal Forte Tablet Side Effects in Tamil:

  • செரிமான கோளாறு
  • மூச்சு திணறல்
  • குமட்டல்
  • அலர்ஜி
  • வாந்தி
  • பசியின்மை
  • வயிற்று போக்கு
  • மலச்சிக்கல்
  • நெஞ்சு எரிச்சல்
  • வயிற்று வலி
  • உதடு அல்லது வாயில் புண்

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு இருந்தால் அதனை மருத்துவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.

ரெபெஸ் DSR காப்ஸ்யூல் (Rebez Dsr) மாத்திரையில் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.. 

மாத்திரையை சாப்பிடும் முறை:

மருத்துவர் உங்களுக்கு மெஃப்டால் ஃபோர்டே மாத்திரையினை ஆலோசனை செய்த அளவில் மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். அப்படி செய்யலாம் அந்த அளவினை கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொள்ள கூடாது. ஏனென்றால் இதுமாதிரி நாம் செய்தாலும் அதனால் பின் விளைவுகள் வரக்கூடும்.

மேலும் இந்த மாத்திரையினை தண்ணீர் அல்லது தேநீர், உணவு போன்றவற்றில் கலந்து எடுத்துகொள்ள கூடாது. வாய் வழியாக தான் தேவையான அளவு எடுத்துக்கொண்டு முழுங்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  • சிகரெட் பிடிப்பவர்
  • மது அருந்துபவர்
  • குழந்தைகள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவர் மெஃப்டால் ஃபோர்டே மாத்திரையினை பரிந்துரை செய்தால் நீங்கள் தற்போது வேறு ஏதேனும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் அதனை பற்றியும் மற்றும் உணவு முறைகளை பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now