மெஃப்டல் பி Syrup எதற்கு சாப்பிட வேண்டும் தெரியுமா..? | Meftal P Syrup Uses in Tamil

Advertisement

Meftal P Syrup Uses in Tamil

ஹலோ மக்கள்ஸ்..! இப்போது நாம் இருக்கும் காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் துரித உணவுகளும், வாகனப் புகைகளும், சுற்றுசூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் யாருக்கு என்ன பாதிப்பு வரும் என்று சொல்லவே முடியாது. இப்படி இருக்கும் சூழலில் நமக்கு ஏதாவது சிறிய காய்ச்சல் வந்தால் கூட நாம் மருத்துவமனைக்கு செல்வதை விட்டுவிட்டு மருந்தகத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறோம். அதுவும் அவர்கள் கொடுக்கும் மாத்திரை எதற்காக என்று தெரியாமலேயே வாங்கி சாப்பிடுகிறோம்.

மருத்துவரின் அனுமதி இல்லாமல் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது மிகவும் தவறு. சரி இப்போ மருந்தகத்தில் கொடுக்கும் மாத்திரைகள் எதற்கு என்று எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். அதற்கு தான் நம் பொதுநலம் பதிவு இருக்கிறதே..! நம் பதிவில் தினமும் ஒவ்வொரு மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மெஃப்டல் பி Syrup எதற்கு சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Meftal P Syrup Uses – பயன்பாடுகள்:  

  • வலி நிவாரணி
  • பல் வலி
  • தசை வலி
  • மூட்டு வலி
  • காலங்களில் வலி
  • மைக்ரேன் தலைவலி
  • அதிக இரத்தப்போக்கு
  • ஒற்றைத் தலைவலி
  • நரம்பு வலி
  • மாதவிடாய் வலிகள்
  • வீக்கம்
  • காய்ச்சல்
  • அழற்சி
  • அறுவை சிகிச்சைக்கு பின்னர் வலி

Moxifloxacin கண் சொட்டு மருந்து எதற்காக பயன்படுகிறது

Meftal P Syrup Side Effects – பக்க விளைவுகள்:

  • வாந்தி
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • தலைவலி
  • மயக்கம்
  • வயிற்றுப்போக்கு
  • பசியிழப்பு

Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

எப்படி பயன்படுத்துவது: 

இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அளவிடும் கோப்பையால் அளந்து வாயால் எடுக்கவும். பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கவும். மெஃப்டல்-பி சஸ்பென்ஷன் மருந்தை உணவுடனோ அல்லது இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

முன்னெச்சரிக்கை: 

இம்மருந்தை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்து கொள்ளக்கூடாது. மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை மருத்துவரின் அனுமதி பெற்று பயன்படுத்துவது நல்லது.

கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement