Melamet Cream Uses in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் (Melamet Cream Uses in Tamil) மெலமெட் கிரீமின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு, உடை போன்றவற்றில் மருந்தும் ஒன்றாக மாறிவிட்டது. இப்போதெல்லாம், உடலில் ஒரு சிறிய பிரச்சனை வந்தாலும் உடனே மருந்து உட்கொள்ள தொடங்கிவிடுகிறோம். மருந்து என்பது, நம் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும்போது மட்டுமே உட்கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால், இப்போது அப்படி இல்லை, சிறிய தலைவலி ஏற்பட்டால் கூட உடனே ஒரு மாத்திரையை உட்கொண்டுவிட்டு வேலையை பார்க்க தொடங்கிவிடுவோம். இது முற்றிலும் தவறான ஒன்று. நாம் அடிக்கடி அல்லது அதிகமான மருந்து எடுத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நம் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.
எனவே அடிக்கடி மருந்து உட்கொள்வதன் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உட்கொண்டால் கூட அம்மருந்தின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் Melamet க்ரீமின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
What is The Use of Melamet Cream in Tamil:
Melamet க்ரீம் பின்வரும் உடல் பிரச்சனைகளுக்கு வெளிப்புற மருந்தாக பயன்படுகிறது.
- Melasma (தோலில் கருமை அல்லது சாம்பல் நிற திட்டுகள்)
- முகப்பரு
- உச்சந்தலையில் தோலழற்சி
பக்க விளைவுகள்:
Melamet க்ரீம் ஒரு சிலர்க்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
- தோல் வலி
- முகப்பரு
- தோல் சிவத்தல்
- தோல் எரிச்சல்
- அதோல் அரிப்பு
Montek Fx மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் மருந்தை பயன்படுத்திகொண்டு இருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் கூறிவிட்டு அதன் பிறகு, இம்மருந்தை பயன்படுத்த வேண்டும்.
முக்கியமாக பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த கூடாது.
பெர்மெத்ரின் லோஷனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |