Methanal Uses in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மெத்தனால் என்றால் என்ன.? அதன் பயன்கள் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வேதியியலில் மெத்தனால் ஒரு முக்கியமான சேர்மம் ஆகும். நாம் அனைவருமே படிக்கும்போது மெத்தனால் எத்தனால் என இரு வேதிச்சேர்மம் பற்றி அறிந்து இருப்போம். எத்தனால் என்பது எத்தில் ஆல்கஹால் , தானிய ஆல்கஹால் என்று அழைக்கப்படுகிறது. இது மதுஅருந்துவதற்கான ஆல்கஹால் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பழச்சாறுகளின் நொதித்தல் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. மறுபுறம், மெத்தனால் என்பது மெத்தில் ஆல்கஹால் என்று அழைக்கப்படுகிறது. மரக்கட்டைகளில் இருந்து தயாரிக்கிறார்கள். மெத்தனால் ஒரு காலத்தில் வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படுத்தி வந்தார்கள். எத்தனாலை விட மெத்தனால் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். ஓகே வாருங்கள் மெத்தனால் பற்றிய விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
மெத்தனால் என்றால் என்ன.?
மெத்தனால் என்பது ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு CH3OH ஆகும். இதனை மெத்தில் ஆல்ககால், மரச்சாராயம், மர நாப்தா மற்றும் கார்பினால் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் மரத்தைச் சிதைத்து வாலைவடித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்பட்டதால் இது மரசராயம் என்று அழைக்கப்படுகிறது.
மெத்தனால் என்பது ஒரு எளிய ஆல்ககால் ஆகும். இது லேசானதாகவும் எளிதில் ஆவியாகக்கூடியதும், எளிதில் தீப்பற்றக்கூடியதும் ஆகும். மெத்தனால் பார்மால்டிகைடு, அசிட்டிக் அமிலம், மெத்தில்-டெர்ட்-பியூட்டைல் ஈதர் போன்ற வேதிப்பொருட்கள் தயாரிக்க அடிப்படையான வேதிச் சேர்மமாக பயன்படுத்தப்படுகிறது. மெத்தனால் எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். மெத்தனால் உட்கொண்டால் வாந்தி, வயிற்றுப் போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மரணத்திற்கு வழிவகுக்கும்.
Methanal Uses in Tamil:
- மெத்தனால் இயந்திரங்களில் எரிபொருளாவும், பல்துறை இரசாயனமாகவும் பயன்படுகிறது.
- மெத்தனால் அசிட்டிக் அமிலம் மற்றும் ஃபார்மால்டிஹைட் உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ரோகார்பன்கள், ஓலிஃபின்கள் மற்றும் சில நறுமண கலவைகள் உற்பத்தியில் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது.
- தற்போது போதைக்காக மது தயாரிப்பிலும் மெத்தனால் மூலப்பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.