மெத்தில்கோபாலமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

மெத்தில்கோபாலமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Methylcobalamin Tablet Uses in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் ஒவ்வொரு வகையான மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து வருகிறோம், அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது மெத்தில்கோபாலமின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான். சரி இந்த மெத்தில்கோபாலமின் மாத்திரை எந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. இந்த மாத்திரை நமது உடலில் எப்படி வேலை செய்கிறது. எந்த அளவில் இந்த மாத்திரையை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

மெத்தில்கோபாலமின் பயன்கள்:

இந்த மெத்தில்கோபாலமின் மாத்திரை என்பது வைட்டமின் பி12, நரம்புகள் சார்ந்த பிரச்சனைக்கு மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் பயன்படும் மாத்திரை ஆகும். இந்த மெத்தில்கோபாலமின் மாத்திரைகளை வாய் வழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆக வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

இதனுடன் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க மெத்தில்கோபாலமின் பயன்படுத்தப்படுகிறது.

மெத்தில்கோபாலமின் புற நரம்பியல் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

பக்க விளைவுகள் – Methylcobalamin Tablet Side Effects in Tamil:

மெத்தில்கோபாலமினின் சில பொதுவான பக்க விளைவுகள்:

1. குமட்டல் மற்றும் வாந்தி
2. வயிற்றுப்போக்கு
3. பசியின்மை
4. தலைவலி
5. தோல் வெடிப்பு
6. மார்பு வலி மற்றும் அசௌகரியம்
7. ஓய்வின்மை
8. சோர்வு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மெட்ரோகில் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

முன்னெச்சரிக்கைகள்:

கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க மெத்தில்கோபாலமின் பயன்படுத்தக் கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகள், வயதானவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

மாத்திரையின் அளவு:

உங்கள் உடல் நிலைக்கு மருத்துவரை எந்த அளவில் Methylcobalamin Tablet-ஐ பரிந்துரைத்தார்களோ. அந்த அளவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. எந்த ஒரு மாத்திரைகளையும் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது, அப்படி எடுத்துக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் தான் பின் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement