Methylprednisolone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறியலாம் வாங்க..!

Advertisement

Methylprednisolone Tablet Uses in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் பலவகையான உடல் சார்ந்த பிரச்சனைக்கு மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். இருப்பினும் நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரை உண்மையில் நமது உடலுக்கு பயனளிக்கிறதா? அல்லது அந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது நமது உடலில் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுத்துமா? என்று யாரும் தெரிந்துகொள்வதில்லை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை நாம் எடுத்துக்கொள்வதில் ஒன்றும் எந்த ஒரு தவறும் இல்லை. அதுவே நாமாக மெடிக்கல் ஷாப்பில் வாங்கி சாப்பிடும் மாத்திரைகளை பற்றி முதலில் அறிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏனென்றால் பிறகு நாம் தான் பலவகையான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.. அதேபோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி அறிந்துகொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆக உங்களுக்கு உதவும் வகையில் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் Methylprednisolone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை அறியலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Methylprednisolone மாத்திரையின் பயன்கள்:Methylprednisolone

தீவிர ஒவ்வாமை எதிர்விளைவு, உணர்விழப்பு, ஆஸ்துமா, முடக்கு வாத குறைபாடு, தோல் குறைபாடுகள், கண் பார்வை குறைபாடுகள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த சிண்ட்ரோம் சிகிச்சைக்காக Methylprednisolone பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

Methylprednisolone Tablet Side Effects in Tamil – மாத்திரையின் பக்க விளைவுகள்:

தொற்றுக்கான அதிகரித்த அபாயம் , எடை கூடுதல், மனநிலை மாற்றங்கள், வயிற்று நிலைகுலைவு, நடத்தை மாற்றங்கள், எலும்பின் அடர்த்திக் குறைதல், தோல் மெலிதல், நீரிழிவு, தலைவலி, தலை சுற்றல், மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா.! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

Methylprednisolone தொடர்புடைய எச்சரிக்கைகள்:

கர்ப்ப காலத்தில் இந்த Methylprednisolone மாத்திரை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் ஆக உங்கள் மருத்துவரிடம் ஆலோசை கேட்ட பிறகு இந்த மாத்திரையையே எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கல்லீரலில், கிட்னி, இதயம் இது போன்ற உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் உடல் நலமருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவது மிகவும் நல்லது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement