Metro Plus Ointment Uses in Tamil
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் முதலில் செல்வது மருந்தகத்திற்கு தான். அங்கு சென்று நமக்கு உடல் ரீதியாக என்ன செய்கிறது என்று சொல்லி அதற்கு என்ன மாத்திரைகளோ அதை வாங்கி வந்து அதனை பயன்படுத்துகிறோம். ஆனால் அங்கு தரும் மாத்திரைகள் எதற்கு சாப்பிடுவது என்று தெரியாமல் நாமும் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று சாப்பிடுவோம்.
சிலர் அதனை சரியாக எடுத்துக்கொள்வார்கள். சிலர் தவறாக எடுத்துக் கொள்வார்கள். அதாவது மதியம் சாப்பிடும் மாத்திரையை இரவு என்றும், ஒரு வேளை மாத்திரை சாப்பிடவில்லை என்றால் இரண்டு மாத்திரை என்றும் சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவது முற்றிலும் தவறு. அதேபோல் எந்த மாத்திரையாக இருந்தாலும் அதனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது மிகவும் தவறானது. ஆகவே மாத்திரை பற்றி நன்றாக தெரிந்துகொண்டு சாப்பிடவேண்டும். சரி வாங்க இப்போது Metro Plus Ointment பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Metro Plus Ointment Uses in Tamil:
பின் வரும் நோய்களில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் அதற்கு இந்த ஆயில்மெண்ட் பயன்படுத்தப்படுகிறது. அல்லது அதனை தடுப்பதற்கு ஆற வைப்பதற்கும் இந்த மருந்து உதவி செய்கிறது. நாள்பட்ட காயங்கள், ஆக்டினிக் கெரடோசிஸின் புண்கள், காயம் தொற்று, தோல் சீர்குலைவுகள், அழற்சி பருக்கள் மற்றும் ரோசாசியா இன் கொப்புளங்கள் போன்றவற்றிற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
Metro Plus Ointment Side Effects in Tamil:
இந்த ஆயில்மெண்ட் பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். பக்கவிளைவுகள் வருவதற்கு முக்கியமான காரணம் அந்த மருந்தில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் சேர்க்கப்பட்டால் சில பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சரியான மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.
- தோல் எரிச்சல்
- எரிவது போன்ற உணர்வு
- தோலில் உணர்விழப்பு
- எரிதிமா
- நமைச்சல்
- வறட்சி
Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |