Metrogyl 400 Tablet Uses
நாம் வாழும் இந்த அவசர உலகம் மருந்து மாத்திரைகளால் இயங்கி கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்றைய நிலையில் பலரும் மருந்து மாத்திரைகளை உண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் நாம் உண்ணும் உணவுமுறையும் சுற்றுசூழல் மாசுபாடு தான். அதுபோல நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் முதலில் செல்வது மருந்தகத்திற்கு தான். அங்கு சென்று நமக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி செய்வது தவறான ஓன்று.
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் சென்று அவர் எழுதி தரும் மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும். அதுபோல நீங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் போது அது எதற்காக வாங்கி சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக மாத்திரைகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று மெட்ரோகில் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Levocetirizine 5 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Metrogyl 400 Tablet Uses in Tamil:
மெட்ரோகில் 400 மாத்திரை (Metrogyl 400 Tablet) பாக்டீரியாவால் ஏற்படும் பல்வேறு தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு ஆன்டிபயாடிக் மருந்தாகும். இது வயிறு, குடல், பிறப்புறுப்பு, இதயம், இரத்தம், மூளை, கல்லீரல், நுரையீரல், எலும்புகள், மூட்டுகள், சிறுநீர் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.ஈறு புண்கள் மற்றும் பிற பல் நோய்த்தொற்றுகள், கால் புண்கள் மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுத்தப்படலாம். தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நிறுத்துவதற்கு இது செயல்படுகிறது.
மேலும் இந்த மெட்ரோகில் 400 மாத்திரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! |
மெட்ரோகில் 400 மாத்திரையின் பக்கவிளைவுகள்:
பெரும்பாலான இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. மேலும் இந்த மெட்ரோகில் மாத்திரையை மருத்துவரின் அனுமதியில்லாமலும் எதற்கு சாப்பிட வேண்டும் என்று தெரியாமலும் எடுத்து கொண்டால் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
- தலைவலி
- வாய் மற்றும் நாக்கில் வறட்சி
- குமட்டல்
- சுவை இழப்பு
மேல்கூறிய பக்கவிளைவுகள் ஏதும் இருந்தால் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பின் மருத்துவரை அணுகுவது நல்லது.
மெட்ரோகில் 400 மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது..?
இந்த மாத்திரையை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரையை முழுவதுமாக விழுங்குங்கள். அதை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். மெட்ரோகில் 400 மாத்திரை மருந்தை உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..! |
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள்
- தாய்ப்பால் கொடுப்பவர்கள்
- மது மற்றும் புகைபிடிப்பவர்கள்
- கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்கள்
- வாகனம் ஓட்டுபவர்கள்
மேல்கூறியவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த மாத்திரையை பயன்படுத்துவது நல்லது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |