Metronidazole 200mg Tablet Uses
நமது உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது, அதற்கு எந்த மாதிரியான மாத்திரையினை கொடுக்க வேண்டும் என்பது மருத்துவம் படித்த ஒருவரால் மட்டுமே தெரிந்துக்கொள்ள வேண்டும். இது தான் உண்மை என்று தெரிந்தும் கூட ஒரு சிலர் மருத்துவரை அணுகாமல் கடைகளில் உள்ள மருந்து மாத்திரையினை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு நாம் செய்வது என்பது மிகவும் தவறு. ஏனென்றால் நம்முடைய உடலில் ஒரு சிறிய காய்ச்சல் ஏற்படுகிறது என்றாலுமே அதற்கு நாம் எந்த மாதிரியான மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் அதில் உள்ள பயன்கள் என்ன மற்றும் இதனால் வேறு என்ன மாதிரியான பக்க விளைவுகள் வரக்கூடும் என்பதையும் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று பயனளிக்கும் விதமாக Metronidazole 200mg என்ற மாத்திரைக்கான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்று விவரமாக பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
மெட்ரோனிடசோல் 200மிகி மாத்திரை பயன்கள்:
நம்முடைய உடலில் காணப்படும் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளை குணப்படுத்த மெட்ரோனிடசோல் 200மிகி மாத்திரை பயன்படுகிறது.
இத்தகைய பயன்பாடு இல்லாமல் பெண்களின் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும் தொற்று, அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் தொற்று மற்றும் நுரையீரலில் ஏற்படும் தொற்றுகளையும் குணப்படுத்த உதவுகிறது.
மருந்தின் அளவு:
இந்த மாத்திரையினை நீங்கள் மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் மருத்துவர் கூறிய அளவினை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
மேலும் தண்ணீருடன் மட்டும் தான் இந்த மாத்திரையை நசுக்காமல் முழுங்க வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
பக்க விளைவுகள்:
- மயக்கம்
- வாந்தி
- குமட்டல்
- காய்ச்சல்
- தோல்களில் அழற்சி
- மலச்சிக்கல்
- வறண்ட வாய்
- வயிற்று போக்கு
மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் இந்த மாத்திரையினை எடுத்துக்கொண்ட பிறகு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு இருந்தால் அதனை உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கை:
நமக்கு எந்த ஒரு மாத்திரையினை மருத்துவர் பரிந்துரை செய்தாலும் தற்போதைய நிலை பற்றியும், மருத்துவம் மற்றும் உணவு முறை பற்றியும் கூறுவது வழக்கம்.
அதேபோல் இந்த மாத்திரையினை உங்களுக்கு பரிந்துரை செய்தாலும் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |