வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Metronidazole மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: March 22, 2025 5:53 PM
Follow Us:
metronidazole tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Metronidazole Tablet Uses in Tamil | Metronidazole Side Effects in Tamil

நமது உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது, அதற்கு எந்த மாதிரியான மாத்திரையினை கொடுக்க வேண்டும் என்பது மருத்துவம் படித்த ஒருவரால் மட்டுமே  கொடுக்க முடியும். இது தான் உண்மை என்று தெரிந்தும் கூட ஒரு சிலர் மருத்துவரை அணுகாமல் கடைகளில் உள்ள மருந்து மாத்திரையினை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு நாம் செய்வது என்பது மிகவும் தவறு. ஏனென்றால் நம்முடைய உடலில் ஒரு சிறிய காய்ச்சல் ஏற்படுகிறது என்றாலுமே அதற்கு நாம் எந்த மாதிரியான மாத்திரையினை எடுத்துக்கொண்டாலும் அதில் உள்ள பயன்கள் என்ன மற்றும் இதனால் வேறு என்ன மாதிரியான பக்க விளைவுகள் வரக்கூடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்களாக சென்று மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடும் போது உங்களின் உடல் எடைக்கு ஏற்றது போல மாத்திரையின் அளவுகளை எழுதி தர மாட்டார்கள்.

அதுவே நீங்கள் மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் போது உங்களின் உடல் எடைக்கான மருந்து, மாத்திரையின் அளவுகளை எழுதி தருவார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரையில் உள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் metronidazole மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

மெட்ரோனிடசோல் மாத்திரை பயன்கள்:

மெட்ரோனிடசோல் 400 மாத்திரை பயன்கள்

நம்முடைய உடலில் காணப்படும் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணி தொற்றுகளை குணப்படுத்த மெட்ரோனிடசோல் மாத்திரை பயன்படுகிறது.

இத்தகைய பயன்பாடு இல்லாமல் காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்களை சரி செய்வதற்கு உதவுகிறது. மேலும் அல்சர் புண்களை சரி செய்வதற்கு உதவுகிறது.

Metronidazole பக்க விளைவுகள்:

  • மயக்கம்
  • வாந்தி
  • குமட்டல்
  • காய்ச்சல்
  • தோல்களில் அழற்சி
  • மலச்சிக்கல்
  • வறண்ட வாய்
  • வயிற்று போக்கு

மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேல் கூறியுள்ள பிரச்சனை இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

மருந்தளவு:

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரையும் இதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை மருத்துவர் அறிவுரை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவு முறை:

உங்களின் உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது. இதனை எடுத்து கொள்வதன் மூலம் குடல் பாக்ட்ரியாக்களை அளித்து அதனின் வளர்ச்சியை தூண்டுகிறது.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதனை அருந்துவதன் மூலம் உங்களின் பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் நெய் சந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்களின் பிரச்சனை ஆனது அதிகரிக்க கூடும்.

என்ன தான் நீங்கள் பிரச்சனைக்கான மாத்திரை எடுத்து கொண்டாலும், உங்களின் வாழ்க்கை முறையும், உணவு முறையும் சரியாக பின்பற்றினால் தான் பிரச்சனையை சரி செய்ய முடியும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now