Mondeslor Tablet Uses in Tamil
உடலில் காணப்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நாம் தீர்வாக மருந்து மாத்திரைகளை தான் கருதுகிறோம். அந்த வகையில் நம்முடைய உடலில் காணப்படும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கல்லீரல் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை ஆகிய நோய்களுக்கு நாம் நீண்ட வருடங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் இவ்வாறு நாம் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக அதில் உள்ள பயன்களை நாம் தெரிந்துக்கொள்வது போல பக்க விளைவுகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். எனவே இன்றைய பதிவில் Mondeslor மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Mondeslor மாத்திரை பயன்கள்:
பொதுவாக Mondeslor மாத்திரை ஆனது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஒவ்வாமை அலர்ஜி, ஒவ்வாமை நாசி அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் நீண்ட கால ஆஸ்துமா, வற்றாத ஒவ்வாமை அலர்ஜி ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அளிப்பதற்கு பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.
மருந்தின் அளவு:
நாம் எடுத்துக்கொள்ளும் எந்த மாத்திரையாக இருந்தாலும் அது நமது உடலில் காணப்படும் நோயின் தன்மை மற்றும் நமது உடலின் ஆரோக்கியம் இந்த இரண்டினையும் வைத்து தான் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் Mondeslor மாத்திரை பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தோராயமாக 1 என்ற அளவில் 1 வாரத்திற்கு மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது.
மருந்து உட்கொள்ளும் முறை:
இம்மாத்திரையை டீ, காபி அல்லது நசுக்கியோ எடுத்துக்கொள்ள கூடாது. தண்ணீருடன் மட்டும் தான் இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொள்ள கூடாது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Mondeslor Tablet Side Effects:
- தலைவலி
- தலைசுற்றல்
- மூட்டு வலி
- வாந்தி அல்லது குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- மூச்சு திணறல்
- காய்ச்சல்
- அலர்ஜி
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினாலும் அதையும் உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அலர்ஜி உள்ளவர்கள் இத்தகைய நபர்கள் மருத்துவரிடம் முன்னெச்சரிக்கையாக தற்போது உள்ள உங்களின் நிலைமை பற்றி தெளிவாக பேச வேண்டும்.
Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |