Monorin 150 Tablet Uses in Tamil
நாம் வாழும் இவ்வுலகம் எந்த அளவிற்கு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது அந்த கால கட்டத்தில் யாருக்காவது உடலில் ஏதும் பிரச்சனை என்றால் அந்த நோயை உணவு மூலமாக சரி செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது இருக்கும் காலத்தில் நாம் மருந்துகளை தான் உணவாக உண்டு வாழ்கின்றோம். இதை தான் உணவே மருந்து என்கிற காலம் மாறி மருந்தே உணவு என்ற சூழலில் வாழ்ந்து வருகின்றோம். அவ்வளவு ஏன் நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி, புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகின்றோம்.
இப்படி ஒரு சூழலில் நம் உடலுக்கு ஏதும் பாதிப்பு என்றால், நாம் மருத்துவரிடம் தான் ஆலோசனை பெற வேண்டும். அதை விட்டு விட்டு மருந்தகங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. அதனால் தினமும் நம் பதிவின் மூலம் தினமும் ஒரு மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மோனோரின் 150 Mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Montex மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Monorin 150 Tablet Uses in Tamil:
மோனோரின் 150 மிகி என்ற மாத்திரையானது (Monorin 150 MG Tablet) ஹிஸ்டமைன்-2 தடுப்பான் என்று அறியப்பட்ட ஒரு மருந்து குழுவுக்கு சொந்தமான மருந்து ஆகும்.
இந்த Monorin 150 Tablet ஆனது இரைப்பையில் அமில உற்பத்தியின் அளவை குறைத்து, இரைப்பை மற்றும் குடல் புண்களை திறம்பட குணப்படுத்தக்கூடியது. மேலும், இந்த மருந்தானது இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்திக்கு வழிவகுக்குகிறது. இரையாக நோய் (GERD) மற்றும் சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி போன்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அதாவது இந்த Monorin 150 Tablet ஆனது,
- டியோடினல் அல்சர் (Duodenal Ulcer)
- இரைப்பை புண் (Gastric Ulcer)
- இரைப்பைஉணவுக்குழாய் பின்வழிதல் நோய் (Gastroesophageal Reflux Disease)
- அரிப்புடனான உணவுக்குழாய் அழற்சி (Erosive Esophagitis)
- சோலிங்கர்-எலிசன் நோய்க்குறி (Zollinger-Ellison Syndrome)
- மிகைசுரப்பு நிலை (Hypersecretory Condition)
Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Monorin 150 Tablet Side Effects in Tamil:
என்ன தான் இந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை பெற்று நாம் உட்கொண்டாலும், இதனால் சில பக்கவிளைவுகளும் உண்டாகும். அப்படி இந்த Monorin 150 Tablet ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.
- தலைவலி (Headache)
- தலைச்சுற்றல் (Dizziness)
- குமட்டல் அல்லது வாந்தி (Nausea Or Vomiting)
- வயிற்றுப்போக்கு (Diarrhoea)
- வயிற்று வலி (Stomach Pain)
- மன குழப்பம் (Mental Confusion)
- தசை வலி (Muscle Pain)
- சுவாசிப்பதில் சிரமம் (Difficulty In Breathing)
- மார்பகப் பெருக்கம் (Gynecomastia)
மேல்கூறிய பக்கவிளைவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆகையால் நீங்கள் Monorin 150 Tablet எடுத்து கொள்ளும் போது மேல்கூறிய பக்கவிளைவுகள் ஏதும் உங்களுக்கு தென்பட்டால், உடனே மருத்துவரை சென்று ஆலோசிக்க வேண்டும்.
ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள்
Monorin 150 Tablet – முன்னெச்சரிக்கை:
- இந்த Monorin 150 Tablet -ன் தாக்கமானது சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை நீடிக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
- அதுபோல நீங்கள் இந்த மாத்திரையை உட்கொள்ள மறந்து விட்டால், உடனே அடுத்த வேளையில் 2 மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.
- மேலும் ஒருவர் Monorin 150 Tablet -ன் அளவு தெரியாமல் உட்கொண்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
- இந்த Monorin 150 Tablet மருந்தை உட்கொள்ளும் போது புகை பிடிப்பது மற்றும் மது உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- அதுபோல இந்த மருந்து உண்டு நீண்ட நேரம் நெஞ்செரிச்சல் அல்லது வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் இருந்தால் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |