வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Montek bl மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: November 9, 2023 6:16 AM
Follow Us:
Montek bl Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Montek bl Tablet Uses in Tamil

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே படாது என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நமது உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Montek bl மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டோலோபார் 650 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Montek bl Tablet Uses in Tamil:

Montek bl Tablet Side Effects in Tamil

இந்த Montek bl மாத்திரையானது பொதுவாக ஆஸ்துமா, தூசியால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் பருவகால ஒவ்வாமை போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. மேலும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இது பொதுவாக உடலின் லுயூக்கோட்ரின் வேதிப்பொருள் உற்பத்தியாவதை தடுப்பதன் மூலம் வேலை செய்ய தொடங்குகிறது. இதில் பல மி.கி அளவு உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Montek bl Tablet Side Effects in Tamil:

Montek bl மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • உணவுக்குழாய் பிரச்சனைகள்
  • தலைவலி
  • இருமல்
  • வயிற்றுப்போக்கு
  • அஜீரணம்
  • தொண்டை வறட்சி
  • வயிற்று வலி
  • குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

பாராசிட்டமால் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Montek bl மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

உங்களுக்கு குடிப்பழக்கம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Clavulanate மாத்திரை பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now