Montek Fx Tablet Uses in Tamil
பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் Montek Fx பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த Montek Fx எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Montelukast மாத்திரை பற்றிய தகவல்
Montek Fx Tablet Uses in Tamil:
பொதுவாக இந்த Montek Fx மாத்திரையானது ஆஸ்துமா, சளிக்காய்ச்சல், உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் ஆஸ்துமா, பருவகால ஒவ்வாமையால் ஏற்படும் நாசியழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
அதேபோல் மேலும் இது தோலில் ஏற்படும் அழற்சிகளையும் போக்க உதவுகிறது. இதில் பல மி.கி அளவு உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Montek Fx Tablet Side Effects in Tamil:
Montek Fx மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- தூக்கமின்மை
- தொண்டை வலி
- தலைவலி
- வயிற்று வலி
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- சைனஸ் வலி
- மூக்கடைப்பு
- மயக்கம்
- மூட்டு வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Montek bl மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Montek Fx மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிக்க கூடாது.
அதேபோல் ஆஸ்துமா மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் இந்த மருந்தினை பயன்படுத்தக்கூடாது.
உங்களுக்கு சிறுநீரக கோளாறு, கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் அல்லது இதய நோய் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
டோலோபார் 650 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |