Montek LC Kid Tablet
நாம் வாழும் இந்த அவசர உலகம் மருந்து மற்றும் மாத்திரைகளால் இயங்கி கொண்டிருக்கின்றது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவால் வியாதிகளை குணப்படுத்தினார்கள். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உணவாக உண்டு வாழ்கின்றோம். அதாவது உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி நமக்கு உடம்பு சரியில்லை என்றால் நாம் மருத்துவரை அணுகாமல் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்து மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிடுகிறோம்.
அப்படி சாப்பிடும் போது அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம் என்று யோசித்திருக்கிறீர்களா..? உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்று மொண்டேக் LC கிட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! |
குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Montek LC Kid Tablet Uses in Tamil:
மொண்டேக் LC கிட் மாத்திரை (Montek LC Kid Tablet) பொதுவாக குழந்தைகளுக்கு மூக்கில் அடைப்பு அல்லது சளி, மூக்கு ஒழுகுதல், தும்மல், அரிப்பு, வீக்கம், நெரிசல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது ஆஸ்துமா மற்றும் தோல் ஒவ்வாமை சிகிச்சைக்கும் உதவுகிறது.
இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவு, நேரம் மற்றும் வழியில் உணவுக்கு முன் அல்லது பின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும்.
ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! |
மொண்டேக் LC கிட் மாத்திரையின் பக்க விளைவுகள்:
மொண்டேக் LC கிட் மாத்திரை தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தாது மற்றும் குழந்தைகளால் நன்கு பொறுத்துக் கொள்ளப்படுகிறது. மீறி கீழ் கொடுக்கப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
- சொறி
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வாயில் வறட்சி
- சோர்வு
- தலைவலி
- தோல் வெடிப்பு
- தூக்கம்
- வாந்தி
குழந்தைக்கு எப்படி கொடுப்பது..?
இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் கொடுக்க வேண்டும். அதை முழுவதுமாக விழுங்குங்கள். மாத்திரையை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். மொண்டேக் LC கிட் மாத்திரையை உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி நிற்க இந்த மாத்திரை சரியானதா..? |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |