மான்டிகோப் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

மான்டிகோப் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! Monticope Tablet Uses in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றிய காலகட்டத்தில் ஏராளமான உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதற்கு நாம் மருத்துவரிடம் அணுகி அதற்கான சிகிச்சையை பெறுகிறோம். மருத்துவரும் அந்த பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கின்றன. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை நாம் உடலுக்கு எடுத்துக்கொள்வது ஒன்று எந்த ஒரு தவறும் இல்லை. இல்லை இருப்பினும் அதனுடைய பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதனை தெரிந்துகொண்டோம் என்றால் அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது மிகவும் கவனமாக எடுத்துக்கொள்வோம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

மான்டிகோப் மாத்திரை:Monticope Tablet

மான்டிகோப் என்பது ஒரு மருந்து, இது மாத்திரை வடிவத்தில் வருகிறது. இந்த மருந்து மூக்கு ஒழுகுதல், மூக்கில் அடைப்பு, தும்மல், அரிப்பு, வீக்கம், கண்களில் நீர் வடிதல் அல்லது திணறல் போன்ற அலர்ஜி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சுவாச குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சுவாசத்தை எளிதாக்குகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பான் டி மாத்திரை பயன்கள்

மான்டிகோப் மாத்திரை பயன்கள்:

இந்த மாத்திரை எந்தெந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்காது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

  1. பருவகால அலர்ஜி நாசியழற்சி
  2. தொண்டையில் கடுமையான புண்
  3. மூக்கில் சளி சவ்வு அலர்ஜி
  4. காதுச் சுற்று அலர்ஜி
  5. அலர்ஜி நிலைகளுக்கு அ
  6. ஆஸ்துமா
  7. சளிக்காய்ச்சல்
  8. அசாதாரண சளி சுரப்புடன் தொடர்புடைய கடுமையான மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய்கள்
  9. தடித்த சளி இருமல்
  10. தூசி அல்லது செல்லப்பிராணிகளிடம் இருந்து ஏற்படும் அலர்ஜி
  11. சுவாச பாதை நோய்
  12. வற்றாத அலர்ஜி நாசியழற்சி
  13. தோலில் வீக்கம்
  14. உடற்பயிற்சியால் ஏற்படும் ஆஸ்துமா
  15. நீண்டகால ஆஸ்துமா

பக்க விளைவுகள்:

  1. மேல் சுவாசக்குழாய் தொற்று
  2. இருமல், சளி, காய்ச்சல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள்
  3. தலைவலி மற்றும் சோர்வு
  4. தூக்கம்
  5. குமட்டல், வாந்தி, வாய் வறட்சி, தாகம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு
  6. ஓடிடிஸ் மீடியா (காதுகளில் அலர்ஜி அல்லது தொற்று)
  7. தோல் வெடிப்பு
  8. நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்கள் (கவலை, கனவுகள், எரிச்சல், தூக்கத்தில் நடப்பது)
  9. தலைச்சுற்றல், கூச்ச உணர்வு மற்றும் உடலில் குத்துதல் அல்லது உணர்வின்மை
  10. அஜீரணம்
  11. மூக்கில் இரத்தப்போக்கு
  12. அரிப்பு, சிராய்ப்பு
  13. மூட்டு அல்லது தசை வலி
  14. தசைப்பிடிப்பு, பலவீனம்
  15. வீக்கம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

யாரெல்லாம் எந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது?

கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இந்த மருந்தை எடுத்துக்கொள்வது சிறந்தது.

மேலும் கடுமையான ஆஸ்துமா நோயாளிகள், நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்கள், வயதானவர்கள், குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இந்த மருந்தை எடுத்துக்கொள்வது சிறந்தது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement