வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Moxclav 625 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: July 14, 2025 6:58 PM
Follow Us:
Moxclav 625 Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Moxclav 625 Tablet Uses in Tamil

இன்றைய கால கட்டத்தில் என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சுற்றுசூழல் மாசுபாடு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக எடுத்து கொள்ளவது மாத்திரை தான். இந்த மாத்திரை நோய்களை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.  அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகள் அனைத்திலும் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் பார்த்து வாங்க வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Moxclav 625 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Moxclav 625 Tablet Uses in Tamil:

Moxclav 625 Tablet side effects in tamil

Moxclav 625 மாத்திரையானது சைனஸ் பிரச்சனை, சுவாசக்குழாய் தொற்றும் சிறுநீர் பாதை தொற்று போன்ற பாக்ட்ரியாக்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

Moxclav 625 Tablet Side Effects:

  1. வயிற்றுப்போக்கு
  2. வாந்தி
  3. தலைவலி
  4. மயக்கம்
  5. செரிமான பிரச்சனை

மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு மாத்திரையினை எடுத்துக்கொள்வதனால் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

முன்னெச்சரிக்கை:

  • நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • Moxclav 625 மாத்திரை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு மயக்கம், வலிப்பு போன்ற பிரச்சனை ஏதும் இருந்தால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது, ஏனென்றால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டு அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

  • மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு மறுவேளை அந்த மாத்திரையை சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாத்திரையை காபி அல்லது டீயுடன் விழுங்க கூடாது. தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். அது போல இதனை உடைத்தோ அல்லது கரைத்தோ சாப்பிட கூடாது.
  • இந்த மாத்திரையை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். அது போல குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now