Moxifloxacin கண் சொட்டு மருந்து எதற்காக பயன்படுகிறது | Moxifloxacin Eye Drops Uses in Tamil

Advertisement

Moxifloxacin Eye Drops Uses in Tamil

பொதுவாக உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். முன்னோர்களின் காலத்தை விட இன்றைய காலத்தில் நோய்கள் அதிகமாக தாக்குகின்றது. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவு முறை இல்லாமல் இருப்பது தான். நம்முடைய தாத்தா பாட்டி எல்லாம் வயதானால் கூட கண் கண்ணாடி போடாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகளே கண் கண்ணாடி அணிகின்றனர். அதனால் கண்ணிற்கு தேவையான சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அது போல கண்களில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டால் ட்ராப்ஸ் எழுதி கொடுப்பார்கள். இதில் நன்மைகளும் உள்ளது, தீமையும் உள்ளது. அதனால் இந்த பதவில் Moxifloxacin Eye Drops பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Moxifloxacin Eye Drops Uses:

கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை சரி செய்ய உதவுகிறது.

Moxifloxacin Eye Drops Side Effects: 

moxifloxacin eye drops side effects in tamil

கண்ணில் எரிச்சல் ஏற்படடுவது

வறண்ட கண்

கண் உறுத்தி கொண்டே இருப்பது

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை கேட்டு ஆலோசனை பெறுவது நல்லது.

Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

எப்படி பயன்படுத்துவது:

இந்த ட்ராப்பை மருத்துவர் கூறிய அளவில் தான் ஊற்ற வேண்டும். டிராப்ஸை கண்ணுக்கு பக்கத்தில் வைக்காமல், மெதுவாக மருத்துவர் சொன்ன அளவில் மட்டும் ஊற்ற வேண்டும்.

எப்படி வேலை செய்கிறது:

இது பாக்டீரியாவை பிரித்து சரிசெய்வதைத் தடுப்பதன் மூலம் பாக்டீரியா கண் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இது டிஎன்ஏ-கைரேஸ் எனப்படும் பாக்டீரியா நொதியின் செயல்பாட்டை நிறுத்துகிறது.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் டிராப்ஸை ஊற்ற கூடாது.

இந்த ட்ராப்ஸ் ஆனது மயக்கம் மற்றும் கண்களில் எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு எந்த பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை அல்லது சொட்டு மருந்து வேறு ஏதும் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் பற்றிய முழு தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement