Moxikind cv 625 Uses in Tamil
நம் தாத்தா பாட்டி எல்லாம் வயதானால் கூட எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையுமே நோய்கள் தாக்குகின்றது. இதனை சரி செய்வதற்கு மருத்துவரிடம் சென்றால் மாத்திரை, மருந்துகளை தான் எழுதி தருகின்றனர். இந்த மாத்திரை மருந்துகளை போட்டதும், உடல்நிலை சரியாகிறது. ஆனாலும் இதனால் பக்க விளைவுகள் இருக்கிறது என்று எத்தனை நபருக்கு தெரியும். ஆமாங்க நம் சாப்பிடும் ஒவ்வொரும் மாத்திரைகளில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டுமே உள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையையும் பற்றி அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Moxikind cv 625 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Moxikind cv 625 Uses:
மோக்ஸிகைண்ட்-சிவி 625 மாத்திரை காது மற்றும் சைனஸ் தொற்றுகள், சுவாச பாதை நோய்த்தொற்றுகள், பிறப்புறுப்பு பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், தோல் மற்றும் மென்மையான TI போன்ற பாக்டீரியா தொற்றுகளை சரி செய்ய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Moxikind cv 625 Side Effects:
- வாந்தி
- வயிற்றுபோக்கு
- குமட்டல்
- செரிமான பிரச்சனை
- தலைவலி
- மயக்கம்
- தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல்
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் இந்த மருந்தின் கூறுகள் தாய்ப்பாலுக்குள் செல்கின்றன மற்றும் உங்கள் குழந்தைக்கு வாயில் பூஞ்சை தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
மேலும் இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கம் ஏற்படும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இமது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |