Mucolit டிராப்ஸின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! | Mucolite Drops Uses in Tamil

Advertisement

Mucolite Drops Uses in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் மருந்தும் ஒன்றாக மாறிவிட்டது. மூன்று வேலையும் உணவுடன் சேர்த்து மருந்தினையும் உட்கொண்டு வருகிறோம். அந்த அளவிற்கு இக்காலத்தில் நோய் தோன்றிக்கொண்டு இருக்கிறது. அதனால், நாம் உட்கொள்ளும் அனைத்து பொருட்களின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் Mucolit டிராப்ஸின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Mucolit டிராப்ஸ் மருந்தை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருவார்கள். ஆனால், இம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது.? இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா..? உள்ளிட்டவை அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் Mucolit டிராப்ஸ் மருந்தை பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதனின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

What is The Use of Mucolite Drops in Tamil:

Mucolit டிராப்ஸ் பின்வரும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தடுக்கவும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • சளி நீக்கம்
  • நாள்பட்ட மற்றும் கடுமையான சுவாச நோய்கள்
  • இருமல் 
  • தொண்டை வலி 

விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையை இதற்கெல்லாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமாம்

பக்கவிளைவுகள்:

  • வயிற்றுப்போக்கு
  • வாய் உலர்ந்து போதல்
  • தொண்டை உலர்ந்து போதல்
  • குமட்டல்
  • வாந்தி
  • அஜீரணம்
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்று வலி

யாரெல்லாம் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.?

ஒவ்வாமை இருப்பவர்கள் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.

கர்ப்பமாக மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், 12 வயது அல்லது அதற்கும் இளையவராக இருப்பவரகள்  மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது.

Dydrogesterone மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement