Neurobion ஊசியை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Neurobion Injection Uses in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் உணவு தான் அவர்களின் மருந்தாக இருந்தது. அதனால் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் உணவாக உள்ளது. அதாவது ஒரு சிலரின் வாழ்க்கையே மருந்துகளினால் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கையினால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதாவது நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் அதனை சரிசெய்வதற்கு உதவும் மருந்துகளின் எண்ணீக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் இப்பொழுது நீங்கள் ஒரு மருந்தினை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த பதிவில் Neurobion ஊசியை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளவோம் வாங்க. 

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

க்ளோபிலெட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Neurobion Injection Uses in Tamil:

Neurobion Injection Side Effects in Tamil

இந்த Neurobion ஊசியானது இயற்கையாகவே ஒரு இணை நொதி வடிவத்தில் வைட்டமின் பி12 ஆக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் B12 அமைப்புடன் கூடுதலாக மெத்தில் அடங்கியுள்ள உலோகம்-ஆல்கைல் தொகுதியாக உள்ளது.

இது இரத்த ஓட்டத்தின் மூலம் சுற்றியோடு வதன் மூலம் செயல்படுகிறது. இது பொதுவாக உடலில் சிவப்பு இரத்த செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் மல்டிபிள் ஸ்கெலரோசிஸ் (Multiple Sclerosis) எனப்படும் சிதைவு செல் நிலைக்கு எதிராகப் போராட இது துணையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவினை மட்டும் எடுத்து கொள்ளவும் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Neurobion Injection Side Effects in Tamil:

இந்த Neurobion ஊசியை எடுத்து கொள்வதால்,

  • அரிப்பு
  • வயிற்றுப்போக்கு
  • எரிச்சல்
  • தூக்கமின்மை
  • மயக்கம்
  • கல்லீரல் நச்சுதன்மை
  • தலைவலி
  • நுரையீரல் வீக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.

பான்டோசிட் மாத்திரை பற்றிய சில குறிப்புகள்

முன்னெச்சரிக்கை:

இந்தனை Neurobion ஊசியினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

14 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தினை பயன்படுத்த கூடாது.

அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

ஒமிஸ் மாத்திரையின் பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement