Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா..?

Advertisement

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |  Nicip 100 mg Tablet Uses in Tamil

மருத்துவம் என்பது மிகப்பெரிய படிப்பு என்று நாம் அனைவரும் கருதுவோம். ஏனென்றால் நம்முடைய உடலில் ஏதேனும் நோய் பிரச்சனைகள் வந்தால் அவற்றை கண்டறிந்து அதில் இருந்து குணமடைய செய்வது மருத்துவர்கள் தான். இத்தகைய மருத்துவர்கள் நம்முடைய உடல் பிரச்சனைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதிரியான மருந்து மாத்திரைகளை ஆலோசனை செய்கிறார்கள். இவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பற்றியும் தனி ஒரு படிப்பாகவும் படித்து இருக்கிறார்கள். இத்தகைய படிப்பின் மூலம் மருத்துவர் கூறிய மருந்துகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்வது இவர்களின் பொறுப்பு. என்ன தான் நம்முடைய உடலுக்கு ஏற்ற மாதிரியான மாத்திரைகளை சரியான அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட ஒவ்வொரு மாத்திரை மருந்துகளுக்கு சில பக்க விளைவுகள் என்பது இருக்கிறது. அத்தகைய பக்க விளைவுகள் பற்றி அனைத்து மாத்திரைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையினை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் இன்று Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள்:

 nicip 100 mg tablet side effects in tamil

நம்முடைய உடலில் ஏற்படும் கடுமையான ஒரு சில வலிகளுக்கு மட்டும் Nicip 100 mg மாத்திரை ஆனது மருத்துவர்களால் ஆலோசனை செய்யப்படுகிறது.

மேலும் முடக்கு வாதம், கீழ் வாதம் மற்றும் காயத்தினால் ஏற்படும் வலி ஆகியவற்றைக்கு இந்த மாத்திரை ஆனது ஒவ்வொரு உடம்பிற்கு ஏற்றவாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் காது மற்றும் மூக்கு வலி ஆகியற்றையும் குணப்படுத்துகிறது.

Nicip 100 mg Tablet Side Effects in Tamil: 

  • வயிற்று வலி
  • தோலில் அலர்ஜி
  • குமட்டல்
  • மலச்சிக்கல்
  • தலைவலி
  • தலைசுற்றல்
  • நெஞ்சு எரிச்சல்
  • இரத்த சோகை
  • உயர் இரத்த அழுத்தம்
  • வயிற்று போக்கு
  • அளவுக்கு அதிகமான வியர்வை

மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு Nicip 100 mg மாத்திரையினை எடுத்துக்கொள்வதனால் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

மருந்தினை எடுத்துக்கொள்ளும் அளவு:

மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தண்ணீருடன் சேர்த்து இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே மருத்துவர் கூறிய அளவினை விடை கூடவோ, குறைவாகவோ இந்த மாத்திரையை எடுத்துகொள்ள கூடாது.

முன்னெச்சரிக்கை:

  1. கர்ப்பிணி பெண்கள்
  2. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  3. சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள்
  4. கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  5. இருதய நோய் பிரச்சனை உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் உங்களுக்கு மருத்துவர் Nicip 100 mg மாத்திரையினை பரிந்துரை செய்தால் தற்போது உள்ள நிலை பற்றியும் மற்றும் உணவு முறை, வேறு ஏதேனும் மாத்திரை எடுத்துக்கொண்டால் அது பற்றியும் கூற வேண்டியது அவசியம்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement