Nitrofurantoin Tablet Uses
நாம் எடுத்துக்கொள்ளும் எல்லா மாத்திரைகளிலும் பயன்கள் எப்படி இருக்கிறதோ, அதே அளவிற்கு பக்க விளைவுகளும் இருக்கிறது. அவ்வாறு பார்த்தால் அனைத்து வகையான மாத்திரைகளுக்கான பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய முறையில் நாம் தகவலை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைக்கான பக்க விளைவுகளை தெரிந்துக்கொள்வது என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆகவே இன்று Nitrofurantoin மாத்திரைக்கான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Nitrofurantoin மாத்திரையின் பயன்கள் என்ன:
நம்முடைய உடலில் ஏற்படும் சிறுநீர்ப்பை தொற்று மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்று, சிறுநீர் குடல் நோய்தொற்று என இவற்றை அனைத்திற்கும் சிறந்த பலனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
மருந்தின் அளவு:
Nitrofurantoin 100mg மாத்திரையினை வயதில் பெரியவர்கள் மொத்தம் 7 நாட்களுக்கும், வயதில் குறைவானவர்கள் 2 அல்லது 4 நாட்கள் வரையிலும் உங்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மருத்துவர் கூறிய அளவினை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துகொள்ள கூடாது. அதேபோல் தண்ணீருடன் மட்டும் தான் இதை எடுத்துகொள்ள வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Nitrofurantoin Tablet Side Effects:
- தலைசுற்றல்
- நெஞ்சுவலி
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- எலும்புகளில் வலி
- வயிற்றுப்போக்கு
- மன அழுத்தம்
- பசியின்மை
- உடல் சோர்வு
மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு மாதிரியான பக்க விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதனை உடனே மருத்துவரிடம் தெரிவிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
யாருக்கு முன்னெச்சரிக்கை:
நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய மாத்திரையாக இருந்தாலுமே எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதன் படி பார்த்தால் கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், இதய பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
மேலும் இவர்கள் மருத்துவரிடம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் பற்றி கூற வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |