Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

No Cold Syrup Uses in Tamil

இன்று மட்டும் இல்லாமல் என்றும் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மருந்தினை தான் எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் அத்தகைய மருந்தினை மருத்துவர் அனுமதி இல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் வாங்கி எடுத்துக்கொள்கின்றனர். இதுமாதிரி முறையில் எடுத்துக்கொள்வதும் நமது உடலுக்கு நன்மை கிடையாது. இப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு மருந்தினை நாம் உட்கொண்டாலும் அதனுடைய பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட ஓரளவு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மருந்திலும் பக்க விளைவுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் இன்று Nocold சிரப்பின் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

Nocold Syrup பயன்கள்:

no cold syrup benefits in tamil

Nocold சிரப் ஆனது சளி, தலைவலி மற்றும் காது வலி ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த பலனை அளிக்கிறது. அதனால் இந்த சிரப் ஆனது மருத்துவரால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும் இந்த சிரப் ஆனது மூட்டு வலி, மூக்கில் நீர் வடிதல், அலர்ஜி, காய்ச்சல்  மற்றும் பல் வலி போன்றவற்றைக்கும் நல்ல பலனை விரைவில் அளிக்கப்பக்கூடியதாக உள்ளது.

Nocold Syrup Side Effects in Tamil:

  • மலச்சிக்கல்
  • வயிற்று வலி
  • முகம் வீக்கம்
  • சிறுநீர் கழித்தலில் சிரமம்
  • வாந்தி
  • தெளிவற்ற கண்பார்வை
  • தோலில் அலர்ஜி
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • மார்பு வீக்கம்
  • தலை சுற்றம்
  • ஓய்வுயின்மை

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் உடனடியாக தெரியப்படுத்தவும்.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. 

மருந்தினை சாப்பிடும் முறை:

மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே சிரப்பினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அளவு கூடவோ அல்லது குறைவாகவோ கொடுக்ககூடாது.

மேலும் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு இந்த சிரப் பெரும்பாலும் பரிந்துரை செய்வது இல்லை.

முன்னெச்சரிக்கை:

  1. ஆஸ்துமா
  2. கண் பிரச்சனை
  3. நுரையீரல் அடைப்பு
  4. மூச்சுக்குழாய் அடைப்பு
  5. சிறுநீரகம் பிரச்சனை
  6. கல்லீரல் பிரச்சனை

மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகள் குழந்தைக்கு இருந்தாலும் அல்லது அதற்கு வேறு ஏதாவது மருந்து குழந்தைக்கு கொடுத்து கொண்டிருந்தாலும் அதனை மருத்துவரிடம் தெளிவாக கூற வேண்டும் .

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement