வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நொரேதிஸ்டிரோன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Updated On: June 25, 2025 5:45 PM
Follow Us:
norethisterone tablet side effects in tamil
---Advertisement---
Advertisement

Norethisterone Tablet Uses in Tamil

நாம் அனைவருமே எதோவொரு உடல்நிலை பிரச்சனைக்காக மாத்திரைகள், சிரப்புகள் போன்ற மருந்துகளை உட்கொண்டு வருவோம். ஆனால் நாம் உட்கொள்ளும் மருந்தானது எதற்காக பயன்படுகிறது..? இதனை உட்கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வதில்லை. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பல்வேறு மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இப்பதிவில் நொரேதிஸ்டிரோன் மாத்திரை பயன்படுத்தினால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What are The Uses of Norethisterone Tablet in Tamil:

Norethisterone Tablet Uses in Tamil

நொரேதிஸ்டிரோன் மாத்திரை,  ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

மேலும், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து 8 வாரங்களுக்கு கருத்தடை செய்ய உதவுகிறது.

Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்:

  • முகப்பரு
  • ஒழுங்கற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு
  • எடை அதிகரித்தல்
  • முடி வளர்ச்சி அதிகரித்தல்
  • மயக்கம்
  • குமட்டல்
  • குரலில் மாற்றம்
  • தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்

மருந்து உட்கொள்ளும் நபர்கள் கவனிக்க வேண்டியவை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பை நீர்க்கட்டி மற்றும் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு இருக்கும் நபர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் இம்மருந்தை மருத்துவர் பரிந்துரையை பெற்ற பிறகே நொரேதிஸ்டிரோன் மாத்திரையை பயன்படுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

நொரேதிஸ்டிரோன் மாத்திரையை அதிகமாக உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.  எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இம்மருந்தை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நீரிழிவு நோய், தோல் அரிப்பு, மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நொரேதிஸ்டிரோன் மாத்திரையை உட்கொள்ளக்கூடாது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க.. அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now