Norlut n மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Norlut n Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். முக்கியமாக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தாமாகவே உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர் எழுதி கொடுத்த மாத்திரையாக இருந்தாலும் சரி அந்த மாத்திரையானது எதற்காக சாப்பிடுகிறோம், அதனால் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் norlut n மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Norlut n Tablet Uses in Tamil:

Norlut n Tablet side effects in tamil

  • கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு சிகிச்சை
  • மாதவிடாயின் போது வலிக்கான சிகிச்சை
  • எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சை
  • மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) சிகிச்சை
Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

Norlut n Tablet Side Effects in Tamil:

  • மயக்கம்
  • வாய் வறட்சி
  • மலசிக்கல்
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • வயிற்றுபோக்கு
  • தலைவலி
  • மார்பக வலி

மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு மாத்திரையினை எடுத்துக்கொள்வதனால் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா..?

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் மட்டும் தண்ணீருடன் சேர்த்து இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை அடுத்த வேலை சாப்பிடும் போது இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது. மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும்.

மாத்திரை எப்படி வேலை செய்கிறது:

நோர்லட்-என் மாத்திரை ஒரு செயற்கை புரோஜெஸ்டின் ஆகும். இது இயற்கையான புரோஜெஸ்ட்டிரோனின் (பெண் ஹார்மோன்) விளைவுகளைப் பிரதிபலிப்பதன் மூலம் செயல்படுகிறது. இது கருப்பை புறணியின் வளர்ச்சி மற்றும் உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் மாதவிடாய் ஒழுங்கற்றதற்கான சிகிச்சையில் பயனளிக்கிறது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement