நுரோகின்ட் எல் சி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

நுரோகிண்ட்-எல் சி மாத்திரை பயன்கள் -Nurokind LC Tablet Uses in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நுரோகிண்ட்-எல் சி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு மாத்திரை மருந்தாக இருந்தாலும் சரி அதனுடைய பயனர்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் சிறந்த ஒரு செயலாகும். ஏனென்றால் அப்பொழுது தான் நாம் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் அலட்சியமாக இல்லாமல் கவனமுடன் இருப்போம். சரி வாங்க இந்த நுரோகிண்ட்-எல் சி மாத்திரை பயன்கள் என்ன? பக்கவிளைவுகள் என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

நுரோகின்ட்-எல் சி மாத்திரை பயன்கள் – Nurokind LC Tablet Uses in Tamil:Nurokind LC Tablet Uses in Tamil

இந்த நுரோகின்ட்-எல் சி மாத்திரை வளர்சிதை மாற்றம் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது, வைட்டமின் குறைபாடு, உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு, நரம்பியல் கோளாறுகளின் போது வலி, இரத்த சோகை மற்றும் பலவகையான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இந்த மாத்திரை உடலில் லெவோகார்னிடைன், வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் சேதமடைந்த செல்களை மீட்டெடுக்க உதவி செய்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Ofloxacin 200mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

நுரோகிண்ட்-எல் சி மாத்திரை பக்கவிளைவுகள்:

இந்த மருந்தின் பக்க விளைவுகள் பின்வருமாறு வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தலைவலி அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆக இது போன்ற பக்கவிளைவுகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

எச்சரிக்கை:

நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன், உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

மருந்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைப் பின்பற்றுவது முக்கியம், நீங்களாகவே மருந்து அளவுகளை உட்கொள்ளக்கூடாது.

கல்லீரல் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Dolokind Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement