Nurokind Tablet Uses in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நம்முடைய பதிவின் மூலம் தினமும் ஏதோ ஒரு செய்தியினை பயன்பெறும் வகையில் அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது நாம் பெரும்பாலும் நமது உடல் நலத்தில் ஏற்படும் கோளாறுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு மருந்து மாத்திரைகளை அருந்தி வருகிறோம். இவ்வாறு நாம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக அதில் உள்ள பயன்களை நாம் தெரிந்துக்கொள்வது போலேயே அதில் காணப்படும் பக்க விளைவுகளையும் தெரிந்து வைத்து இருப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆகையில் இன்றைய பதிவில் Nurokind என்ற மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Nurokind மாத்திரையின் பயன்கள்:
இந்த மாத்திரை ஆனது நமது உடல்களில் காணப்படும் வலிகளை பெரும்பாலும் சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது கால் வலி, ஊட்டச்சத்து குறைபாடு, பிற நரம்பு பிரச்சனை, நீரிழிவு நியூரோபதி, பசியின்மை மற்றும் இரத்த சோகை என இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் இது உள்ளது.
மருந்தின் அளவு:
இந்த மருந்தின் அளவு ஆனது நமது வயதினை பொறுத்து தான் அமையும். ஆகவே மருத்துவர் பரிந்துரை செய்த அளவில் சரியான முறையில் எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும் தண்ணீருடன் மட்டுமே இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா |
Nurokind Side Effects:
- குமட்டல் அல்லது வாந்தி
- இரைப்பை அழற்சி
- உடலில் அரிப்பு
- எரிச்சல்
- நரம்புத் தளர்ச்சி
- தலைவலி
இத்தகைய பக்க விளைவுகள் அனைத்தும் Nurokind மாத்திரைக்கான பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட இவற்றை இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை பற்றி மருத்துவரிடம் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் இந்த மாத்திரையினை மருத்துவர் பரிந்துரை செய்யும் போது முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |