Okamet 500 Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Okamet 500 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
லோபெராமைட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Okamet 500 Tablet Uses in Tamil:
இந்த ஒகாமெட் 500 மிகி மாத்திரையானது உடலில் சீரான இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவும் ஒரு மருந்து ஆகும். மேலும் இந்த மருந்தானது வகை 2 நீரிழிவு நோய், இதய கோளாறுகள் மற்றும் பல கருப்பை நீர்கட்டிகள் நோய்க்குறிக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
இந்த ஒகாமெட் 500 மிகி மாத்திரையானது கல்லீரலில் உற்பத்தியாகும் குளுக்கோஸின் அளவைக் குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது. இதன் மூலம் இந்த மாத்திரையானது வகை 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.
அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Okamet 500 Tablet Side Effects in Tamil:
Okamet 500 மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- எடை இழப்பு
- வாய்வு
- தலைசுற்றல்
- தலைவலி
- தோல் அழற்சி
- வயிற்று வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்
முன்னெச்சரிக்கை:
இந்த Okamet 500 மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் கல்லீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், இதய நோய், ஒவ்வாமைகள் மற்றும் நீரிழிவு கீட்டோஆசிடோசிஸ் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
அஸ்தகைன்ட் பி டிராப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |