ஒமிஸ் மாத்திரையின் பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Omez Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையினாலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் அதனை சரி செய்வதற்கு உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அவர்களின் உணவுமுறை மற்றும் சரியான வாழ்க்கை முறை ஆகியவற்றால் நன்கு திடமான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரின் வாழ்க்கை மருந்துகளினால் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். அதனால் தான் நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் ஒமிஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

அமோக்ஸிசிலின் மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Omez Tablet Uses in Tamil:

Omez Tablet Side Effects in Tamil

இந்த ஒமிஸ் மாத்திரையானது பிபிஐ (PPIs) என்றழைக்கப்படும் மருந்துத் தொகுப்பைச் சேர்ந்தது. பொதுவாக இது இரைப்பையில் அமிலத்தன்மை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

அதாவது இந்த ஒமிஸ் மாத்திரையானது சிறுநீர்ப்பை புண், இரைப்பை புண், கேஸ்ட்ரோ ஈஸோபாகல் நோய் (GERD), வீக்கம் உணவுக் குழாய் மற்றும் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதை தடுக்க போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தபடுகிறது.

மேலும் இந்த மருந்தானது பாக்டீரியா ஹெலிக்கோபாக்டர் பைலோரி மூலம் ஏற்படும் அனைத்து தொற்றுகளையும் குணப்படுத்த உதவுகிறது. இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்படி உணவுடன் அல்லது உணவு இல்லாமல் வாய்வழியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

செடிரிசின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரையை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Omez Tablet Side Effects in Tamil:

  • வாந்தி
  • மலச்சிக்கல்
  • வயிற்று வலி
  • தூக்கமின்மை
  • தலைவலி 
  • வயிற்றுப்போக்கு
  • வாயு
  • வயிறு வலி
  • வலிப்பு
  • சீரற்ற இதய-துடிப்பு
  • நடுக்கம்
  • தசைப்பிடிப்பு
  • பலவீனம்

ஒமிஸ் மாத்திரையினை பயன்படுத்துவதால் மேலே கூறப்பட்டுள்ள பக்கவிளைவுகளை ஏற்படலாம். இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த ஒமிஸ் மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னாள் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் கூடிய விரைவில் ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகின்றிர்கள் என்றால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னாள் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

கால்சியம் லாக்டேட் மாத்திரையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தால் எப்படி

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement