Omnacortil 5 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Omnacortil 5 Uses in Tamil

நாம் அனைவருமே நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருந்தகத்திற்கோ அல்லது மருத்துவரையோ சந்தித்து அதற்கேற்ற மருந்துகளை வாங்கி உட்கொள்வோம். அப்படி உட்கொள்ளும்போது இந்த மருந்தினை உட்கொண்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் Omnacortil 5 மாத்திரையை உட்கொண்டால் அம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றும் அதனால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையம் தெரிந்து கொள்ள இப்பதிவில் அதன் விவரங்களை கொடுத்துள்ளோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is Omnacortil 5mg Used For:

ஓம்நாகோர்டில் 5 டேப்லெட் அலர்ஜி ஒவ்வாமை தொடர்பான, முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

பயன்பாடுகள்:

  • தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்
  • முடக்கு வாதம் 
  • சுவாச மண்டல் நோய்கள்
  • இரைப்பை குடல் கோளாறுகள் 
  • இரத்த கோளாறு 
  • சுவாச நோய்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஓம்நாகோர்டில் 5 டேப்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Duphalac சிரப் எதற்காக பயன்படுகிறது..? அதன் பக்கவிளைவுகள் என்னென்ன.?

பக்கவிளைவுகள்:

ஓம்நாகோர்டில் 5 டேப்லெட், ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

  • வயிறு பெரிதாகுதல்
  • எரிச்சல் தன்மை
  • அஜீரண கோளாறு
  • குமட்டல்
  • குழப்பம்
  • மறதி
  • வயிறு புண்கள்
  • உயர் இரத்த அழுத்தம்
  • எடை அதிகரிப்பு
  • வயிற்று போக்கு
  • ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
  • தூக்கமின்மை

இம்மருந்தை யாரெல்லாம் பயன்படுத்த கூடாது.?

  • உயர் இரத்த அழுத்தம்
  • எலும்புப்புரை
  • நீரிழிவு
  • நோய்த்தொற்றுகள்
  • மனநோய்
  • வயிற்றுப் புண்கள்

முன்னெச்சரிக்கைகள்: 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் எவரும் ஓம்நாகோர்டில் 5 டேப்லெட்டை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளுதல் கூடாது.

Buscogast மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement