வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பான் டி மாத்திரை பயன்கள் | Pan D Tablet Uses in Tamil

Updated On: January 24, 2025 7:08 PM
Follow Us:
Pan D Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

பான் டி மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Pan D Tablet in Tamil

Pan D Capsule Uses in Tamil: பொதுவாக நம் உடலில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற வெவ்வேறு விதமான நோய்களுக்கு ஆங்கில மருந்து அல்லது நாட்டு மருந்து எடுத்து கொள்வது வழக்கம். அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து பற்றிய நன்மைகள், தீமைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? நாம் இந்த பதிவில் பான் டி மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

பான் டி மாத்திரை பயன்கள் – Pan D Tablet Uses in Tamil:

Pan D Tablet Uses in Tamil

  • Pan-d Tablet Uses in Tamil: இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், சிறு குடல் புண், பெருங்குடல் புண் போன்ற வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை சரி செய்ய பயன்படுகிறது.
  • உடல்நிலை சரி இல்லாத போது ஏற்பட கூடிய வாந்தி, குமட்டல் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
  • நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • அல்சர் நோய் வராமல் பாதுகாப்பதற்கும், அல்சர் நோயை குணப்படுத்தவும் பான் டி மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய அழற்சி, வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது.
  • வயிற்று வீக்கம், ஏப்பம், அஜீரண கோளாறு, இரைப்பை கட்டியை குணப்படுத்தவும், வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத்தை கட்டுப்படுத்தவும் இந்த பான் டி மாத்திரை பெரிதும் பயன்பட்டு வருகிறது.

பான் டி மாத்திரை உடலில் செயல்படும் முறை – Pan D Tablet Uses in Tamil:

  • இந்த மாத்திரையை உட்கொண்டவுடன் அது உடலில் கரைந்து ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கிறது. பின் உடம்பில் அமிலம் சுரப்பதற்கு காரணமாக இருக்கும் புரோட்டோன் பம்பின் செயலை தடுக்கிறது.
  • புரோட்டோன் பம்பின் செயலை தடுப்பதால் வயிற்றில் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க உதவுகிறது.

பக்க விளைவுகள் – Pan D Tablet Side Effects in Tamil:

  • மயக்க உணர்வு, உடல் சோர்வு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • கண் பார்வை மங்குதல், காய்ச்சல், மார்பு வலி, மார்பு வீக்கம் போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • வயிற்று போக்கு, நெஞ்செரிச்சல், தசை வீக்கம், தோல் அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
  • ஒவ்வாமை, எலும்பின் வலு குறைந்து போதல், மாதவிடாய் சரியான காலத்தில் வெளியேறாமல் இருப்பது போன்ற பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • மேற்கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பான் டி மாத்திரை சாப்பிட கூடாதவர்கள்:

  • Pan D Uses in Tamil: கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவர் அறிவுரை இல்லாமல் பான் டி மாத்திரை சாப்பிட கூடாது.
  • கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இதய நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம். பான் டி மாத்திரை பயன்படுத்துவதாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை அவசியம்.
  • பான் டி மாத்திரையை மருத்துவர் எந்த நேரத்தில், எவ்வளவு டோஸேஜ் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறாரோ அப்பொழுது சாப்பிடுவது நல்லது.
ஹைட்ரோகுளோரைடு மாத்திரை பயன்கள்
ஒமபிரசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now