Pantakind Tablet Uses Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலும், அதற்காக ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் நாட்டு மருந்துகளை தான் எடுத்து கொண்டனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் லேசா சளி புடுச்சாலும் உடனே மாத்திரையை போட்டு விடுவார்கள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. உங்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் தினந்தோறும் நம் பதிவில் மாத்திரையில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் pantakind மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Pantakind Tablet Uses:
இந்த மாத்திரையானது வயிறு புண் மற்றும் குடல் புண், வயிற்று அமிலம், இரைப்பை குடல் இரத்தப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Pantakind Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- தலைவலி
மேலே சொல்லப்பட்ள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
வயிற்றில் அமிலம் உற்பத்திக்கு காரணமான ஹைட்ரஜன்-பொட்டாசியம்-ஏடிபேஸ் என்ற பொருளின் செயலை Pantakind மாத்திரை தடுக்கிறது. இது புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் அலையோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
இந்த மாத்திரை சாப்பிடுவதால் தலைசுற்றல் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் Pantakind மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |