Pantocid Tablet Uses in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் உணவு தான் அவர்களின் மருந்தாக இருந்தது. அதனால் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் உணவாக உள்ளது. அதாவது ஒரு சிலரின் வாழ்க்கையே மருந்துகளினால் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கையினால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதனை போக்குவதற்கு உதவும் மருந்துகளின் எண்ணீக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் இப்பொழுது நீங்கள் ஒரு மருந்தினை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த பதிவில் பான்டோசிட் மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளவோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ஒமிஸ் மாத்திரையின் பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
Pantocid Tablet Uses in Tamil:
இந்த பான்டோசிட் மாத்திரையானது ஒரு புரோட்டன்-பம்ப் தடுப்பான் மருந்து ஆகும். பொதுவாக இந்த மருந்தானது GERD அல்லது இரைப்பை அழற்சி நோய், சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி, வயிறு அல்லது இரைப்பைப் புண், அமிலம் பின்னோக்கி செல்லுதல் போன்ற இரைப்பை நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
அதாவது இரைப்பையில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த மருந்து செயல்படுகிறது. இது பொதுவாக மாத்திரை வடிவில் கிடைக்கிறது.
அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அமோக்ஸிசிலின் மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
Pantocid Tablet Side Effects in Tamil:
இந்த பான்டோசிட் மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- வயிற்றுப்போக்கு
- தலைசுற்றல்
- வயிற்று வலி
- அரிப்பு
- தசைகளில் வலி
- தலைவலி
- உடல் வெப்பநிலை அதிகரிப்பது
- மங்கலான பார்வை
- Atrophic இரைப்பை
- இரத்தங்களினால் குளுக்கோஸ் அதிகரிப்பது
- காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த ஒமிஸ் மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் கல்லீரல் நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, தோல் அழற்சி நோய், ஒவ்வாமைகள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஹைப்போமேக்னேசேமியா ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த மருந்தை எடுத்துக்கொள்முன், உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.
அதேபோல் பத்து வயதிற்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தினை கண்டிபாக எடுத்து கொள்ள கூடாது.
அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
செடிரிசின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரையை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |