பான்டோப்-டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Pantop d Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த உலகில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் போன்றவற்றால் நமது உடல் நலத்திற்கு குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அதனை சரி செய்வதற்காக பலவகையான மருந்து மாத்திரைகளை நாம் பயன்படுத்துவோம். அதாவது ஒரு சிலரின் வாழ்க்கை மருந்துகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த நிலை எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்களின் காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை உணவு பழக்கங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. இன்றைய சூழலில் இவ்விரண்டுமே சரியாக இல்லை. அதனால் நமது உடல்நலத்தை சரிசெய்வதற்கு உதவும் மருந்து மாத்திரைகளை பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்று பான்டோப்-டி மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Pantop d Tablet Uses in Tamil:

Pantop d Tablet Side Effects in Tamil

இந்த பான்டோப்-டி மாத்திரையானது டோபமைன் அண்டகோனிஸ்ட்ஸ் குழுவினை சேர்ந்தது. இது பொதுவாக இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பார்கின்சன் நோய்க்காக மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கு இது வாந்தி மற்றும் குமட்டல் போக்கை தடுக்க உதவுகிறது.

இந்த மருந்து வயிற்றின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தசைகளை இறுக்கியும், வெளியேறும் போது ஆசுவாசப்படுத்திவிடுகிறது. இந்த செயல் நீங்கள் உட்கொள்ளும் உணவின் போக்கை உங்கள் வயிற்றிலிருந்து உங்கள் குடல் வரை வேகமாக உதவுகிறது.

இதனால் உங்களுக்கு குமட்டல் வாந்தி போன்றவை ஏற்படும் உணர்வு குறைகின்றது. இதனை பொதுவாக உணவுக்கு 15-30 நிமிடங்களுக்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Pantop d Tablet Side Effects in Tamil:

இந்த பான்டோப்-டி மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • மங்கலான பார்வை
  • மலச்சிக்கல்
  • தோல் கடுமையான அரிப்பு
  • தலைவலி
  • சோர்வு
  • மார்பக வலி
  • வயிற்றுப்போக்கு
  • ஒற்றைத் தலைவலி
  • வாய் வறட்சி
  • பலவீனம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த பான்டோப்-டி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இரத்தத்தில் மக்னீசியச் சத்துக் குறை உடைய நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ள நோயாளிகள் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

இந்த மருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

லெவோசெடிரிசைன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement