பான்டோப் மாத்திரையை பயன்படுத்துவதால் இவ்வளவு நடக்குமா..?

Advertisement

Pantop Tablet Uses in Tamil

பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் Pantop மாத்திரை பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த Pantop மாத்திரையானது எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Amoxyclav 625 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Pantop Tablet Uses in Tamil:

Pantop Tablet Side Effects in Tamil

இந்த பான்டோப் மாத்திரையானது ஒரு புரோட்டன்-பம்ப் தடுப்பான் மருந்து ஆகும். அதாவது GERD அல்லது இரைப்பை அழற்சி நோய், சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி (Zollinger-Ellison syndrome), வயிறு அல்லது இரைப்பைப் புண், அமிலம் பின்னோக்கி செல்லுதல் போன்ற இரைப்பை நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இரைப்பையில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த மாத்திரையானது செயல்படுகிறது. இந்த மாத்திரையில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.

அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Aceclofenac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Pantop Tablet Side Effects in Tamil:

Pantop மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. மூட்டு வலி
  2. வாயு தொல்லை 
  3. தலைவலி
  4. வயிற்றுப்போக்கு
  5. தலைசுற்றல்
  6. வயிற்று வலி
  7. வாந்தி
  8. வைட்டமின் பி 12 குறைபாடு
  9. வலிப்பு
  10. நடுக்கம்
  11. தசை பிடிப்புகள்
  12. அசாதாரண இதயத்துடிப்பு
  13. கடுமையான வயிற்றுப்போக்கு
  14. தோல் அழற்சி நோய்
  15. சிறுநீரக பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த Pantop மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் கல்லீரல் நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, தோல் அழற்சி நோய், ஒவ்வாமைகள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஹைப்போமேக்னேசேமியா ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த மருந்தை எடுத்துக்கொள்முன் உங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

பத்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

பான்டோப்-டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement