Pantoprazole Tablets ip 40 mg Uses in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை சரியாக வைத்து கொள்வதற்கு மருந்து என்று ஒன்றை தனியாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் உட்கொண்ட உணவுகளே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் ஒரு சிலர் உயிர்வாழ முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அதனால் நமது உயிரினை காக்கின்ற மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது நிமிடம் உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமுமொரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Zinetac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Pantoprazole Tablets ip 40 mg Uses in Tamil:

பண்டோப்ராசோல் 40 மி.கி மாத்திரையானது ஒரு புரோட்டன்-பம்ப் தடுப்பான் மருந்து ஆகும். மேலும் இது GERD அல்லது இரைப்பை அழற்சி நோய், சோழிங்கர்-எலிசன் நோய்க்குறி, வயிறு அல்லது இரைப்பைப் புண், அமிலம் பின்னோக்கி செல்லுதல் போன்ற இரைப்பை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகின்றது.
இரைப்பையில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த மருந்தானது செயல்படுகிறது.
இந்த மாத்திரையில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
பான்டோப் மாத்திரையை பயன்படுத்துவதால் இவ்வளவு நடக்குமா
Pantoprazole Tablets ip 40 mg Side Effects in Tamil:
Pantoprazole Tablets ip 40 mg மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- மூட்டு வலி
- வயிற்று வாயு
- வைட்டமின் பி 12 குறைபாடு
- வலிப்பு
- நடுக்கம்
- தசை பிடிப்புகள்
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- தலைசுற்றல்
- வயிற்று வலி
- வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Amoxyclav 625 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Pantoprazole Tablets ip 40 mg மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் அழற்சி நோய் போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
பத்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Aceclofenac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |













