Paracetamol 500mg Uses in Tamil
பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் பாராசிட்டமால் 500 மிகி பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த பாராசிட்டமால் 500 மிகி எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Clavulanate மாத்திரை பற்றிய தகவல்
Paracetamol 500mg Uses in Tamil:
இந்த பாராசிட்டமால் 500 மிகி மாத்திரை, லேசான வலி நிவாரணி என்று வகைப்படுத்தப்படுகிறது, காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும்.
அதேபோல் இந்த மாத்திரையானது காய்ச்சல் காரணமாக உடலில் ஏற்படும் வலியை குறைக்கிறது. மேலும் புற்றுநோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது.
இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Paracetamol 500mg Tablet Side Effects in Tamil:
பாராசிட்டமால் 500 மிகி மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- இரைப்பை புண்கள்
- சோர்வு
- இரத்த சோகை
- குமட்டல்
- வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
செடிரிசின் சிரபின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
முன்னெச்சரிக்கை:
இந்த பாராசிட்டமால் 500 மிகி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் தீவிரமான கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |