Pheniramine Maleate Syrup Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியத்தில் ஏதவாது பிரச்சனை ஏற்படுவது இயல்பு தான். காய்ச்சல், சளி, இருமல், காயம் போன்றவை ஏற்படுவது இயல்பு தான். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக மருத்துவரை நாடி செல்கின்றோம். அவர்களும் மருந்து மாத்திரை எழுதி கொடுக்கின்றனர். மருத்துவரே எழுதி கொடுப்பதால் அதில் நன்மைகள் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது. அதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரும் மாத்திரையிலும் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Pheniramine maleate சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Pheniramine Maleate Syrup Uses:

- ஒவ்வாமை பிரச்சனை
- மூக்கு ஒழுகுதல்
- கண் எரிச்சல்
- தும்மல்
- தோல் அலர்ஜி
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு Pheniramine Maleate சிரப் மருந்தாக கொடுப்படுகிறது.
Pheniramine Maleate Syrup Side Effects:
- தூக்கம்
- மயக்கம்
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- வாய் வறட்சி
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்திருந்தாலும் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
| Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. |
முன்னெச்சரிக்கை:
- நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிக்க கூடாது.
- இந்த சிரப் குடிக்கும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை குடிப்பதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
- Pheniramine Maleate சிரப்பானது மயக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
- 5 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த சிரப் பரிந்துரைப்படுவதில்லை. அதனால் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.
- நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும்.ஒருவேளை நீங்கள் சிரப்பை குடிக்க மறந்துவிட்டால் அதனை மறுவேளை சேர்த்து குடிக்க கூடாது.
இந்த சிரப் ஆனது எப்படி வேலை செய்கிறது.?
ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துவதற்கு காரணமான ‘ஹிஸ்டமைன்’ எனப்படும் ஒரு வேதியியல் தூதரின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் ஃபெனிரமைன் மெலேட் செயல்படுகிறது. இதன் மூலம் ஃபெனிரமைன் மெலேட் ஒவ்வாமை பிரச்சனையை சரி செய்கிறது.
Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














