Pinda Thailam Uses in Tamil
நாம் செய்யும் வேலையினால் உடல்வலி ஏற்படுகிறது, இதனை சரி செய்வதற்கு வெந்நீர் வைத்து குளிப்போம். இல்லையென்றால் தைலம் வைத்து தேய்ப்போம். ரொம்ப வலியாக இருந்தால் ஆலோசனை கேட்போம். மருத்துவர் உடலின் வலிக்கு ஏற்றவாறு மருந்து, மாத்திரை எழுதி தருவார்கள்.
ஆனால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆயின்மென்ட் மற்றும் தைலத்தை தான் பயன்படுத்துகிறோம். தைலத்தை வலிக்காக தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை எந்தெந்த வலிகளை சரி செய்யும் என்று இருக்கிறது. அதனை அறிந்து கொள்வது அவசியமானது. அதனால் தான் இன்றைய பதிவில் பிண்ட தைலம் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
பிண்ட தைலம் பயன்கள்:
பிண்ட தைலம் என்பது ஆயுர்வேத எண்ணெயாக இருக்கிறது, இந்த எண்ணெயானது நமது உடலில் தோல்பகுதியில் பயன்படுத்தப்படும் எண்ணெயாக இருக்கிறது.
பிண்ட தைலமானது கீழ் வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையை சரி செய்வதற்கு உதவுகிறது.
பொதுவாக உடலில் உள்ள வலிகளை சரி செய்வதற்க்கு உதவுகிறது.
உங்களுடைய மூட்டுகளை சுற்றி சிவந்த நிறமாக காணப்பட்டாலோ அல்லது வீக்கமாக காணப்பட்டாலோ அதனை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
இந்த தைலம் அப்பளை செய்வதால் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, ஒருவேளை உங்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்:
இந்த எண்ணெயை வெளிப்புறமாக தான் பயன்படுத்த வேண்டும். அதாவது தோலின் மேற்பகுதியில் தான் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பாதங்களில் வலி இருந்து, அந்த இடத்தில் நீங்கள் பிண்ட தைலத்தை பயன்படுத்தினால் கொஞ்சம் நேரம் கழித்து துணியை பயன்படுத்தி துடைக்க வேண்டும். ஏனென்றால் இந்த தைலமானது நீங்கள் நடக்கும் போது வழுக்கி விடும். அதனால் துடைத்து விட்டு அந்த தைலம் போகின்ற அளவிற்கு கழுவி விடவும்.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
தைலத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:
தேனீ மெழுகு – 280 கிராம்
மஞ்சிஷ்டா – 455 கிராம்
சர்ஜராசா – 186 கிராம்
Sariva – 455 கிராம்
எள் எண்ணெய் – 6 லிட்டர்
தண்ணீர் – 24 லிட்டர்
தைலம் எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்:
இந்த தைலத்தை நீங்கள் ஓபன் செய்ததும் ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தி முடித்து விடுவது நல்லது.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த தைலத்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிண்ட தைலத்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தோலில் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்தை தடவுவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |