Povidone Iodine Ointment Uses in Tamil
நமக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை, மருந்து தான். அதில் முக்கியமாக நமது உடல்நிலையை சரி செய்யும் மருந்து, மாத்திரையை தாமாக மெடிக்களில் சென்று வாங்கி சாப்பிட கூடாது. அது போல நமக்கு அடிபட்டு காயங்கள் ஏற்பட்டாலும், அல்லது சரும பிரச்சனைக்காக மாத்திரை மருந்து மற்றும் ஆயின்மென்ட், சோப்பு போன்றவற்றை பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் மருந்துகள் நமது பிரச்சனையை சரி செய்தாலும் அதில் பக்க விளைவுகளும் உள்ளது. அதனால் இந்த பதிவில் povidone iodine ஆயின்மென்ட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Povidone Iodine Ointment Uses in Tamil:
Povidone iodine ஆயின்மென்ட் சிறுகாயங்கள், தீக்காயங்கள், கீறல்கள், தொற்று நோய்களை சரி செய்ய பயன்படுத்தபடுகிறது.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் நோயாளிகளின் தோலை கிருமிகளை நீக்குவதற்கு மருத்துவர்களின் கைகளில் பயன்படுத்தப்படுகிறது.
அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
Povidone Iodine Ointment Side Effects:
- தோல் சிவப்பு நிறமாக காணப்படுதல்
- தோல் உரிந்து காணப்படுவது
- சருமம் உலர்ந்து காணப்படுதல்
- சருமத்தில் எரிச்சல் பிரச்சனை
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இந்த ஆயின்மென்டை பயன்படுத்துவதற்கு முன் தற்போது பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளின் முழு தகவலை தெரிவிக்கக் வேண்டும்.
உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆயின்மென்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த ஆயின்மென்டை பரிந்துரைக்க கூடாது.
குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |