ப்ரெட்னிசோலோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
Prednisolone tablet uses in tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் ஒவ்வொரு வகையான மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று தெரிந்துகொள்ள இருப்பது ப்ரெட்னிசோலோன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான். அதாவது இந்த மாத்திரை எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், யார் சாப்பிடலாம், யார் சாப்பிட கூடாது, மேலும் இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ப்ரெட்னிசோலோன் மாத்திரை பயன்கள் – Prednisolone tablet uses in tamil:
ப்ரெட்னிசோலோன் மாத்திரை அழற்சிக்கு வழிவகுக்கும் உடலில் உள்ள சில பொருட்கள் வெளியிடாமல் தடுக்க உதவும் கார்டிகோஸ்டிராய்டு என்று அறியப்படுகிறது.
தோல் பிரச்சனைகள், மூட்டுவலி, மூச்சுக் கோளாறுகள், சொரியாசிஸ், சரும வீக்கம், ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பல நிலைகளின் சிகிச்சைக்கு இந்த மாத்திரை உதவுகிறது.
- கௌடி ஆர்திரிடிஸ்
- சொரியாஸிஸ்
- நெஃப்ரோடிக் நோய்க்குறி
- முடக்கு வாதம்
- ஆஸ்துமா
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Morphine மாத்திரை பயன்கள் விளைவுகள்
கவனம் தேவை:
இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன் இந்த மருந்தை பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது அது கொண்டிருக்கும் ஏதேனும் உட்பொருட்களுடன் ஒவ்வாமை இருந்தால் ப்ரெட்னிசோலோன் மாத்திரை மருந்துடன் எடுத்துக்கொள்ளக் கூடாது. ப்ரெட்னிசோலோன் மாத்திரை மருந்தைப் பூஞ்சைத்தொற்று இருந்தாலும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
உங்களுக்கு ஏற்படும் ஒவ்வாமை அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உட்பட உங்கள் மருத்துவ வரலாறு அனைத்தையும் மருத்துவர் அறிந்திருக்க வேண்டும்.
உங்களுக்கு கல்லீரல், நீரிழிவு, தைராய்டு பிரச்னைகள், சிறுநீரக நோய், மனச்சோர்வு, பதற்றம், இதயப் பிரச்சனைகள் அல்லது தசை கோளாறுகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். மருத்துவர் ப்ரெட்னிசோலோன் மாத்திரை உங்கள் உடலுக்கு பாதுகாப்பானதா என்று முடிவு செய்து, கணக்கிடப்பட்ட மருந்தளவைப் பரிந்துரைப்பார்.
மருத்துவர்கள் பொதுவாக ப்ரெட்னிசோலோன் மாத்திரை கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கமாட்டார்கள்.
மருத்துவரை கலந்தாலோசிக்காமல் குறைந்த அளவு அல்லது அதிக மருந்தளவுகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Leekuf மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
பக்க விளைவுகள் – Prednisolone tablet side effects in tamil:
- ஆக்ரோஷம் அல்லது கோபம்
- மங்கலான பார்வை
- சிறுநீர் வெளியீடு குறைதல்
- தலைச்சுற்றல்
- தலைவலி
- எடை அதிகரிப்பு
- வேகமான இதய துடிப்பு
- அதிகரித்த பசி
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |